June 3, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு லாரிகளில் கனிம வளங்கள் அதிகமாக கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் கரூர்,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கோவை வழியாக லாரிகளில் சரக்குகள், கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் மேற்கண்ட லாரிகளில் நிர்ணயம் செய்யப்பட்ட எடையை விட அதிக பாரம் ஏற்றி செல்லப்படுவதாக கோவை வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.இதனை தொடர்ந்து கடந்த 5-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கருமத்தம்பட்டி, வாளையாறு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மொத்தம் 802 லாரிகளில் சோதனை நடத்தியதில் 72 லாரிகளில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட அதிக பாரம் ஏற்றி செல்லப்பட்டது தெரியவந்தது.இந்த லாரிகளுக்கு மொத்தம் ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.