• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சிறுவாணி அணை நீர்மட்டம் 2.85 அடியாக சரிவு

June 3, 2023 தண்டோரா குழு

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகக் குறைந்து உள்ள நிலையில், வரும் நாள்களில் மாநகரில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கோவை மாநகரில் 26 வார்டுகள், 20 க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடி நீராதாரமாக சிறுவாணி அணை உள்ளது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அணையின் நீர் மட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

மார்ச்சில் அணையின் நீர் மட்டம் 6 அடியாகச் சரிந்தது. அதைத்தொடர்ந்து, ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் வந்தது. தற்போது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லாததாலும்,வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து உள்ளதாலும்,கடந்த வாரத்தில் 3.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 2.85 அடியாகக் குறைந்தது.இதனால்,குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு 4.50 கோடி லிட்டரில் இருந்து, 3.60 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டு உள்ளது.

வரும் நாள்களில், அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால்,மாநகரில் குடிநீர் பற்றாக் குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,

ஜூன் இறுதிக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். பருவ மழை தொடங்கி விட்டால் அணையின் நீர்மட்டம் உயரும். பின்னர், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும்.மாநகரில் சிறுவாணி நீர் விநியோகிக்கும் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கடந்தாண்டைப் போல பில்லூர் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் படிக்க