• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“நிலை வெல்னஸ் கலக்ட்டிவ் சிகிச்சை மையம்” கோவையில் துவக்கம் !

June 4, 2023 தண்டோரா குழு

கோவை பொள்ளாச்சி சாலை ஒத்தக்கால்மண்டபம் மயிலேறிபாளையம் பகுதியில் “நிலை வெல்னஸ் கலக்ட்டிவ் சிகிச்சை மையம்” துவக்கபட்டுள்ளது.நேற்று மாலை நடைபெற்ற இம்மையத்தின் துவக்க விழாவில் சிறப்பு விருந்துனராக கலந்துகொண்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இணை செயலாளரும் மருத்துவருமான மகேந்திரன் மற்றும் கோவை மாநகர காவல் ஆனையர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் துர்கேஷ் நந்தினி, ரஞ்சனா,ஸ்ரீஷா நிதின்,ஸ்வாதிரோதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இம்மையத்தில் அலோபதி, நேட்சுரோபதி, ஆயுர்வேத மற்றும் ட்ரடிஷனல் சிகிச்சை எனப்படும் பாரம்பரிய பாட்டி வைத்திய சிகிச்சை முறைகள் ஒருங்கிணைந்து அளிக்கபடவுள்ளது. குறிப்பாக மற்ற மருத்துவமனைகளை காட்டிலும் அனைத்து சிகிச்சை முறைகளும் ஒரு குடையின் கீழ் அளிக்கபடுவதாக மிகவும் சிறப்பு மிக்க சிகிச்சை மையமாக இந்த சிகிச்சை மையம் திகழவுள்ளது.

மருத்துவர் தினேஷ் தலைமையில் மருத்துவர் சுவேதா,மருத்துவர் சுந்தர்மருத்துவர் செளமியா, மருத்துவர் சதீஸ் மற்றும் மருத்துவர் ஷைனி உள்ளிட்டோர் இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கவுள்ளனர்.நாட்டுலேயே முதன் முறையாக அனைத்து மருத்துவ முறைகளும் ஒருங்கினைந்த வகையில் சிகிச்சை மையம் துவங்கபட்டுள்ளது என்ற பெருமையை பெற்றுள்ளது “நிலை வெல்னஸ் கலெக்டிவ்” சிகிச்சை மையம்.சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் துவங்கபட்டுள்ள இந்த சிகிச்சை மையத்தில் 25 சிகிச்சை அறைகள் ஏற்படுத்தபட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என சுமார் 70 பேர் சிகிச்சையளிக்க உள்ளனர்.

குறிப்பாக பிரசவகாலத்தில் பெண்களுக்கான டிரடிஷ்னஸ் சிகிச்சைகள், சர்க்கரை நோய் தடுப்பு முறைகள், உடல்பருமன், மன இருக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு அனைத்து மருத்துவ முறைகளை கலக்டிவாக சிகிக்கை அளிக்கபடுகிறது இம்மையத்தின் சிறப்பம்பசம் என கூறிகிறார் சிகிச்சை மையத்தின் தலைமை செயல் அதிகாரியும் மருத்துவருமான தினேஷ். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த சிகிச்சைமையம் அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் செயல்படுகிறது எனவும் இதற்கென பிரத்தியேகமாக சிகிச்சை பெற்ற மருத்துவர்கள் பணியாற்ற உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இம்மையத்தில் சாத்வீக முறையில் திருமணங்கள் நடைபெறும் விதமாக சாத்வீக் டிரடிஷனல் ஹால் ஏற்படுத்தபட்டுள்ளதாவும் தெரிவித்தார்.மேலும் துவக்க விழாவில் புகழ்பெற்ற பாடகியான மஹதியின் இசைகச்சேரியும் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் படிக்க