• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மரத்தின் நன்மைகள் பற்றி என்ன தெரியும் நமக்கு ?

June 5, 2023 தண்டோரா குழு

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED)ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது.

இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இச்சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும்,முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

மரங்கள் பலவிதம் ஒவ்வொரு மரத்திற்கு ஒவ்வொரு தன்மை உண்டு ஒரு மரம் என்பது மரம் மட்டுமல்ல மனிதன் சுவாசிப்பதற்கான பிராணவாயுவின் பெட்டகம் மற்றும் பறவைகள் முதல் எறும்பு வரை, புழு,பூச்சி முதல், கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் வரை இருக்கும் உயிர்களுக்கு உணவாக, உறைவிடமாக இருக்கும் மரங்களை, நாம் என்றுமே முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஒரு மரத்தில் இருந்து மனிதன் கற்றுகொள்ள பலநூறு விஷயங்கள் இருக்கின்றன. புயல், மழை, பனி என எத்தனையோ போராட்டங்களைத் தாங்கி, வளர்ந்து நிற்கும் மரங்களை தங்கள் சுய தேவைக்காக சிலமணி நேரங்களில் வெட்டி எறிந்து விடுகிறோம். தான் வாழ்ந்த காலமெல்லாம் நாம் சுவாசிக்க உயிர்காற்றை தரும் மரங்களுக்கு நாம் செய்யும் நன்றி இதுதானா ?

சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக, சில பத்தாண்டுகள் கழித்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை, நாம் முதுகில் சுமக்க வேண்டிய நிலைமை வரலாம் என்பது பொதுக் கருத்து.
சமீபத்தில் உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில நாடுமுழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர்.அதேவேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் தவித்து வருவதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகி வந்ததை அனைவரும் அறிந்தோம்.

ஒவ்வொரு மரமும் ஒரு வரம். ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் அளவின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.23 கோடி என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. ஒரு மரத்தின் மதிப்பு விலை மதிக்க முடியாதது. ஆனால், அதன் உண்மையான மதிப்பை உணர்ந்துகொள்ளப் பொருளாதார ரீதியில் அதை மதிப்பிட வேண்டி யிருக்கிறது. இதை டெல்லி கிரீன்ஸ் அமைப்பு செய்திருக்கிறது. ஒரு வளர்ந்த ஆள் ஒரு நிமிடத்துக்கு 7-8 லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறார்.அதாவது, ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் காற்றை. இதில் 20 சதவீதம் ஆக்சிஜன். அப்படியென்றால், ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்சிஜனை கிரகித்துக்கொள்கிறார். 2.75 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.6,500.

இதைக் கொண்டு கணக்கிட்டால் ஒரு மனிதன் ஒரு நாளைக்குச் சுவாசிக்கும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.13 லட்சம். மரங்கள் தரும் சேவைகளை மதிப்பிட்ட ஆராய்ச்சிகளை ஒப்பு நோக்கும்போது 2 வளர்ந்த மரங்கள், ஒரு நபருக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு ஆண்டுக்கு ரூ.23 கோடி. ஒரு மரம் தரும் ஆக்சிஜனின் மதிப்பே இவ்வளவு என்றால்,

அது நமக்குத் தரும் மற்ற சேவைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மரத்தைப் போன்று இயற்கையும் அதிலுள்ள பல்வேறு உயிரினங்களும் தாவரங்களும் மனித குலத்துக்குக் காலங்காலமாகச் செய்துவரும் சேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைக் காப்பாற்ற வேண்டும்.

இன்று உலகமெங்கும் மக்களிடையே காணப்படும் முக்கிய பிரச்சனை மாசு படிந்த காற்றும் மற்றும் தண்ணீர் பற்றாக்குறைதான்.இந்த பூமியில் மேற்பரப்பில் பெருவாரியாக காணப்படும் காடு மற்றும் மரங்கள் போன்ற இயற்கை வளங்களை , ஒவ்வொரு நாட்டு மக்களின் சுயதேவைக்காக்ல்வும்,தொழிற்சாலை உபயோகத்துக்காகவும் மழைவளக் காடுகளை அழித்து வருகிறோம்.இதனால் இயற்கையாக பெய்யும் மழையின் அளவு வெகுவேகமாக குறைந்து வருகிறது.அப்படியே மழை பெய்தாலும் , அதை அப்படியே மழை பெய்தாலும்,அதை அப்படியே பூமிக்கு அடியில் தேக்கி வைக்க மரங்களோ , காடுகளோ போதுமானதாக இல்லை.இதனால் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது.இந்த பூமி சுமார் 80 சதவீதம் கடலால் சூழப்பட்டு உள்ளது. பூமிக்குள் இருக்கும் மொத்த தண்ணீரின் அளவு சுமார் 1.39 கோடி கியூபிக் கி.மீ.இதில்,நல்ல தண்ணீர், நிலத்தடி நீர் மற்றும் ஏரிகள், குளங்கள் போன்றவற்றில் நிரம்பும் தண்ணீர் அளவு சுமார் 1.07 லட்சம் கியூபிக் கி.மீ.ஆனால், பூமியில் இருக்கும் தண்ணீரில் ஒவ்வொரு நாளும் சுமார் 1,200 கியூபிக் கி.மீ. அளவு ஆவியாகிறது. இதற்கு காரணம் பூமியின் மேற்பரப்பில் உள்ள பசுமை காடுகள் அழிக்கப்படுவதாலும் பூமி வெப்பமாவதாலும்தான். உலகின் பல அரிய செல்வங்களை – குடி தண்ணீரிலிருந்து விலையுயர்ந்த ரத்தினக்கல் வரை – பெரும் செல்வந்தர்கள் மட்டுமே அனுபவிக்கிறார்கள். இந்த வளங்கள் எல்லாம் மனித இனத்திற்கு மட்டும் சொந்தமானது இல்லை. இந்த பூமியில் பிறந்த புழு, பூச்சிகள், செடி கொடிகளுக்கும் இவற்றை அனுபவிக்க உரிமை உண்டு. அவற்றுடன் சேர்ந்து வாழ்ந்தால்தான் மனித வாழ்க்கை சிறக்கும். நமது அடுத்த தலைமுறை செழித்து வாழும் என்பதை இந்த சுற்றுச்சூழல் தினத்தில் நினைவு கொள்ளுவோம். பூமியின் வளங்களை காப்பது நம் கையில் தான் இருக்கிறது. புவியின் சூழல் பற்றிய சில புள்ளி விவரங்களை பார்க்கலாம்…!

🌳 உலகின் சரிபாதி வெப்ப மண்டலக் காடுகள் அழிந்துவிட்டதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

🌳 ஒரு மனிதன் தினமும் 2 கிலோ கழிவுகளை தூக்கி எறிகிறான். 45 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஆண்டுதோறும் உபயோகிக்கிறான். இதனால் இயற்கை வளம் வேகமாக காலியாவதுடன், சுற்றுச் சூழல் மாசுபட்டும் வருகிறது.

🌳 அமெரிக்காவில் 27 சதவீத காகிதங்களே மறு சுழற்சி செய்யப்படுகின்றன. 100 சதவீத காகிதங்களையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால் ஆண்டு தோறும் 25 கோடி மரங்களை வெட்டப்படாமல் தடுக்கலாம்.

🌳 ஆண்டுதோறும் 204 கோடி கிலோ அளவுள்ள கழிவுகள் கடலுக்கு செல்கின்றன. அவை ஆண்டிற்கு 10 லட்சம் உயிரினங்களை பலி வாங்குவதாக கணிக்கப்படுகிறது.

🌳 சீனாவில் 2012–ம் ஆண்டு ஒரு லட்சம் பேர் சைக்கிள்களை ஓட்டி கார்பன்–டை–ஆக்சைடு மாசு இல்லாத பயணத்திற்கு சைக்கிள்களை பயன்படுத்துவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

🌳 ஆப்கானிஸ்தானில் 2011–ம் ஆண்டு புவி தின அமைப்பு 2.8 கோடி மரங்களை நட்டு பிரமிக்க வைத்தனர்.

சுற்றுச்சூழலை காப்பாற்ற மற்றவர்கள் எப்படி கடைப்பிடித்தார்கள் என்று பார்த்தோம். நாமும் திருந்த வேண்டும் .காட்டை அழிப்பது, வன உயிரினங்களை வேட்டையாடுவது உள்ளிட்ட செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். பூமி என்பது மனிதனுக்குக் கொடுத்துள்ள வளங்கள் ஏராளம். அவற்றை முறையான திட்டமிடலுடன் சுயநோக்கம் இன்றி பயன்படுத்த வேண்டும். அதேபோன்று, மற்ற உயிரினங்களையும் சுதந்திரமாக வாழ, மனிதன் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான், பூமியின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருக்க அதிகம் மரங்களை வைத்து சுற்றுச்சூழலை பாது காப்போம் .

மேலும் படிக்க