June 6, 2023 தண்டோரா குழு
ஹைகான் இந்தியா லிமிடெட் பவர் எலக்ட்ரானிக்ஸ்,சோலார் வாட்டர் ஹீட்டர்கள், லித்தியம் அயன் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் வாகனம் ஆகியவற்றில் ஈடுபடும் முன்னணி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றாகும். 1991 முதல் கடந்த 32 ஆண்டுகளில்,மாறிவரும் வாடிக்கையாளர்களின் மனதை உணர்ந்து, வாடிக்கையாளர் திருப்தியை மனதில் கொண்டு ஹைகான் உயர்தர தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
ஹைகான் இந்தியா லிமிடெட் 5 பணியாளர்களுடன் ஒரு SSI யூனிட்டாக ஆரம்பித்து இன்று 10 இலட்சத்திற்கும் மேல் நம்பிக்கையான வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் தென்னிந்தியாவின் முன்னணி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் நிறுவனமாக திகழ்கிறது. இந்த 32 ஆண்டுகாலமாக வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப ஹைகான் பல்வேறு உயர்தர தயாரிப்புகளை வழங்கி வாடிக்கையாளர் திருப்தியை மனதில் வைத்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
மூன்று உற்பத்தி மையங்களையும் DSIR -ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரு R&D மையத்தையும் கொண்டு தென்னிந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது. இந்திய சந்தையில் சோலார் வாட்டர் ஹீட்டர்களை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனங்கள் சிலவற்றுள் ஹைக்கான் நிறுவனமும் ஒன்றாகும். காலத்திற்கு ஏற்ப வீடுகளுக்கு,தொழில் துறை, கமர்ஷியல் இவற்றுக்கு ஏற்ற சோலார் வாட்டர் ஹீட்டர்களை புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பங்களுடன் நாங்கள் அவ்வப்போது அறிமுகம் செய்து வந்தோம்.Hykon க்கு சொந்தமாக சோலார் வாட்டர் ஹீட்டர் உற்பத்தி யூனிட் உள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள நீலாம்பூரில் ஹைகான் சொந்தமாக சோலார் வாட்டர் ஹீட்டர்களை உற்பத்தி செய்யும் யூனிட்டை கொண்டுள்ளது. இது 100 LPD முதல் 1 லட்சம் LPD வரை ஆண்டுக்கு 46000 சோலார் வாட்டர் ஹீட்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.2023 ஆம் ஆண்டில், ஹைகான் புதிய அளவிலான செலவு குறைந்த மற்றும் உயர்தர உள்நாட்டு சோலார் வாட்டர் ஹீட்டர் மாடல்களை அறிமுகப்படுத்துகிறது.
புதிய மாடல் புளூட்டோ பிளஸின் MRP வெறும் 215,970/- இல் தொடங்குகிறது, (ஜி.எஸ்டி. உட்பட) – சந்தையில் மிகக் குறைந்த விலை. சந்தையில் விலை குறைவாக இருந்தாலும், தரத்தில் எந்த சமரசமும் இல்லை – தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி இவற்றை முன்னிறுத்துவதில் நாங்கள் உறுதியாக இருகிறோம்.
எங்கள் புதிய மாடல்கள் வழக்கமான அதே உயர்தர பொருட்களால் புதுப்பிக்கப்பட்ட உற்பத்தி செயல்முறைகளுடன் தயாராகின்றன.
புதிய அளவிலான சோலார் வாட்டர் ஹீட்டர்களின் சில அம்சங்கள்:
• சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கு அதிக ஆயுள் தரும் வெல்ட்-லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள் தொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே வெல்டு செய்த பகுதியை நீர் தொடும் இடத்தில் ஏற்படும் குழிப்குதி துரு உண்டாகும் வாய்ப்பு மிகக் குறைவு. அதிக திறன் கொண்ட மூன்று அடுக்கு வெற்றிட குழாய்கள் மேகமூட்டமான நாட்களில் கூட சூரியனிலிருந்து அதிக வெப்பத்தை சேகரிக்கின்றன.அலுமினிய ஸ்டாண்ட் பாகங்கள் உள்ளதால் அது துருப்பிடிக்காத மற்றும் நீண்ட காலம் நீடித்து நிற்கும் தன்மையை பெறுகிறது.
மல்டி-ஸ்டேஜ் PUF ஃபில்லிங் தொழில்நுட்பம் சிறந்த இன்சுலேஷனை வழங்குகிறது, இதனால் தண்ணீரை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்கும்.
● எங்களது பிரீமியம் மாடல் சோலார் வாட்டர் ஹீட்டர்கள் ஹைகான் ஜூபிடர் – இன்னர் டேங்க் துருப்பிடிக்காத ஒற்றை மோல்டட் பாலி ப்ரோப்பிலீனால் ஆனது. இது எந்த வகையான தண்ணீருக்கும் உகந்தது – இந்த தொட்டிகள் 2000 PPM வரையுள்ள தண்ணீருடன் பயன்படுத்தப்படலாம். எங்கெல்லாம் தண்ணீரி தரம் கேள்விக்குறியாக உள்ளதோ அங்கே- குழாய்க் கிணற்று நீர், உப்பங்கழிப் பகுதி, கடற்கரைப் பகுதிகளுக்கு ஹைகான் ஜூபிடரை தேர்வு செய்யலாம்.புதிய மாடல் சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கு புளூட்டோ, மூன், ஜூபிடர் மற்றும் டர்போ-டி என பெயரிடப்பட்டுள்ளது.
•15-20 ஆண்டுகளுக்கு இலவச வெந்நீர்
• உங்கள் கரண்ட் பில்களில் பணத்தை சேமிக்கிறது
• உங்களுடைய கார்பன் தடத்தை குறைக்கிறது
• மின்வெட்டு ஏற்பட்டாலும், தேவைக்கேற்ப வெந்நீரை பெற்றிட உதவுகிறது