• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மை பணி 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

June 7, 2023 தண்டோரா குழு

வனத்துறையினருடன் இணைந்து தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரி மலையில் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில் சுமார் 1,500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

இந்த புனிதப் பணியில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கடந்த மாதம் மே 7-ம் தேதி தொடங்கி உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்பணி நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலர்கள் மட்டுமின்றி இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

அடிவாரத்தில் தொடங்கி 4-வது மலை வரை இருந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் இந்த தூய்மை பணி கடந்த 10 வருடங்களாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த தூய்மைப் பணியில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த ஈஷா தன்னார்வலர் மனோகர் அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது, “நான் ஒவ்வொரு வருடமும் சிவாங்கா மாலை அணிந்து சிவனை தரிசிப்பதற்காக இம்மலைக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருகிறேன். தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் இந்த தூய்மைப் பணியில் கடந்த 6 வருடங்களாக பங்கேற்று வருகிறேன். இந்தப் புனிதமான மலையை நாங்கள் எங்களுடைய சொந்த மலையை போல் பார்க்கிறோம். அடுத்த வரும் தலைமுறையினருக்கு இந்த மலையை தூய்மையாக வழங்குவது எங்களுடைய பொறுப்பு என்பதை உணர்ந்து இப்பணியில் ஈடுப்பட்டுள்ளோம். இப்பணி எனக்கு மகிழ்ச்சியையும், மன திருப்தியையும் அளிக்கிறது” என்றார்.

இதேபோல், சென்னையைச் சேர்ந்த ஈஷா தன்னார்வலர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது அனுபவத்தை பகிரும் போது, “சென்னையில் இருந்து வரும் எனக்கு இந்த தூய்மை பணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவசியத்தை அனுபவப்பூர்வமாக உணர்த்தியுள்ளது. இது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக உள்ளது. மலை ஏறும் அனைவருக்கும் இம்மலையை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு இருக்க வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க