June 8, 2023 தண்டோரா குழு
கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுவன் 195 உலக நாடுகளின் பெயர் மற்றும் அந்நாடுகளின் எழுத்துக்களை( spelling) வேகமாக உச்சரித்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கோவை உருமாண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் மற்றும் ரம்யா தம்பதியின் இளைய மகன் லோகித் (6). ஒன்றாம் வகுப்பு பயிலும் லோகித்,பள்ளியில் சேர்ந்த நாள் முதலிலேயே படிப்பில் அதிக ஆர்வமுடன் இருந்துள்ளார்.வழக்கமாக ஆங்கிலத்தில் தடுமாறும் குழந்தைகள் அதிகம் இருக்கும் நிலையில், சிறுவன் லோகித் வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை நினைவில் வைத்து எளிதாக அசாத்தியமாக ஒப்பித்து அசத்தி காட்டியுள்ளார்.
இதனை கவனித்த பெற்றோர்கள் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் கூடுதலான தகவல்களை கற்று தர ஆரம்பித்தனர். குறிப்பாக உலகில் உள்ள நாடுகளின் பெயர்களை கற்றுத் தந்த அவர்கள்,அதற்கான ஆங்கில எழுத்துகளையும்( spelling) சொல்லிக் தந்தனர். இதனையடுத்து உலகில் உள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அந்நாடுகளின் எழுத்துக்களை( spelling )உச்சரித்து அசத்தி காட்டினார். சிறுவனின் இந்த சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் அங்கீகரித்து சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கியது.
தன் நினைவாற்றலால் ஆங்கில உச்சரிப்பில் அசத்தும் சிறுவனை பலரும் வெகுவாக பாராட்டினர்.