June 10, 2023
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் 38 வயது பெண் ஒருவர் சிறுநீரகம் (கிட்னி) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அவருக்கு டாக்டர்கள் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை முடிவு செய்தனர். இதையடுத்து, அவர்கள் சிறுநீரகம் கேட்டு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், சேலத்தை சேர்ந்த 52 வயது ஆண் ஒருவர் உடல்நிலை பாதிப்பின் காரணமாக மூளைச்சாவு அடைந்தார்.அவரது சிறுநீரகத்தை அவர்களின் உறவினர்கள் தானமாக அளிக்க முன்வந்தனர். அதன்படி, அவரின் வலது பக்கத்தில் உள்ள சிறுநீரகத்தை தானமாக பெறப்பட்டு தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது பெண்ணிற்கு டாக்டர்கள் பொருத்தினர்.
மேலும், கிட்னி மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு மருத்துவமனையின் டீன் நிர்மலா பாராட்டுகளை தெரிவித்தார்.