June 14, 2023 தண்டோரா குழு
இந்தியாவில் முதியோருக்கான சிறப்பு உடல்நலப் பராமரிப்பு சேவைகள் வழங்குவதில் புகழ்பெற்ற நிறுவனமான அதுல்யா சீனியர் கேர், இந்நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் அதிக எண்ணிக்கையிலான முதியோர்களுக்கு அமைவிட மாறுநிலை பராமரிப்புக்கான தேவை இருப்பதை உணர்ந்து அதைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அமைவிட மாறுநிலை பராமரிப்பு (டிரான்சிஷன் கேர்) என்பது, மருத்துவமனைகள், மறுவாழ்வு மையங்கள் மற்றும் இல்ல அமைவிட பராமரிப்பு போன்ற வேறுபட்ட உடல்நல பராமரிப்பு சூழல்களுக்கிடையே நோயாளிகள் மாறுகின்றபோது அவர்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பு சேவையை குறிக்கிறது.
இத்தகைய சிறப்பு பராமரிப்பின் மிகப்பெரிய பலன்களை வலியுறுத்த முனைப்பு காட்டும் இந்நிறுவனம், இச்சேவை கிடைக்கும்; நிலையையும் மற்றும் அதன் திறன்மிக்க செயல்பாட்டையும் மேம்படுத்த ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குகிறது. வயது முதிர்ந்த நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வில் ஒரு இன்றியமையாப் பங்கை மாறுநிலை பராமரிப்பு சேவை ஆற்றுகிறது. அதுவும் குறிப்பாக அறுவைசிகிச்சை அல்லது பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நோய்க்கு பிறகு அதிலிருந்து மீண்டு குணமடையும் கால அளவின் போது இத்தகைய பராமரிப்பு சேவை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
அறுவைசிகிச்சை அல்லது நோய்பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு முறை சார்ந்த, ஆதரவளிக்கிற உகந்த சூழலையும் அமைவிட வசதிகளையும் வழங்குவதன் வழியாக, மருத்துவமனைகளில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் இடர் வாய்ப்புகளை குறைக்க அதுல்யாவின் தனிச்சிறப்பான மாறுநிலை பராமரிப்பு சேவை உதவுகிறது. உடலின் இன்றியமையா அறிகுறிகளின் அளவீடுகள் கண்காணிப்பு, மருந்துகளை உரிய நேரத்தில் வழங்கும் மேலாண்மை மற்றும் மீண்டு குணமடையும் காலத்தின் போது உருவாகக்கூடிய எந்தவொரு சிக்கல்களையும் திறம்பட கையாள்வது ஆகியவை இந்த அணுகுமுறையில் உள்ளடங்கும்.
முதிய நோயாளிகள் மத்தியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல நாட்பட்ட நோய்களும் உடல்நல பிரச்சினைகளும் முன்வைக்கும் பொது சவாலை அதுல்யா நன்கு உணர்ந்திருக்கிறது. பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் இடையீட்டு நடவடிக்கைகள் மற்றும் நோயாளியின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை தவறாமல் உரிய நேரங்களில் கண்காணிப்பதன் வழியாக இப்பிரச்சினைக்கு மாறுநிலை பராமரிப்பு சேவை தீர்வு காண்கிறது; முதிய நோயாளிகளுக்கு இருக்கும் பாதிப்புகளும் பிரச்சினைகளும் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதை இது உறுதி செய்கிறது.
கூடுதலாக உடல் சார்ந்த பணி / தொழில் சார்ந்த மற்றும் பேச்சு தொடர்பான சிகிச்சைகள்; போன்ற மறுவாழ்வு சேவைகளை அதுல்யாவின் தனிச்சிறப்பான மாறுநிலை பராமரிப்பு சேவை ஒருங்கிணைக்கிறது; இதன் மூலம் அவர்கள் சுதந்திரமாக இயங்க உதவுவதற்கு அவசியமான திறன்களை அந்நோயாளிகள் திரும்பப்பெறுவதற்கு உதவுகிறது; இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை சிறப்பான விளைவுகளை நோயாளிகள் பெறுவதற்கு வழிவகுக்கிறது; அவர்களை கவனித்து கொள்பவர்கள் மீதான சுமையை இது குறைப்பதோடு நோயாளியின் ஒட்டு மொத்த வாழ்க்கை தரத்தையும் மேம்பட செய்கிறது.
அதுல்யா சீனியர் கேரின் – நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு.ஜி.சீனிவாசன் கூறியதாவது: “டிரான்ஷிஷன் கேர் எனப்படும் மாறுநிலை பராமரிப்பு சேவை என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதாக மாறியிருக்கிறது. வயது முதிர்ந்த நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களை கவனித்துக்கொள்ளும் நபர்களுக்கும் கனிவும், ஆதரவும் கொண்ட சூழலை உருவாக்குவதில் நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு, எமது சேவையின் ஒருங்கிணைந்த ஒரு அம்சமாக இருக்கிறது. இச்சேவையானது, திருப்தி அளவுகளை அதிகரிக்கிறது, சிகிச்சை திட்டங்களை சிறப்பாக கடைபிடிக்கும் நிலையை ஊக்குவிக்கிறது; நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் நபர்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தையும், சலிப்பையும், ஏமாற்றத்தையும் குறைக்கிறது.”
தனிச்சிறப்பான மாறுநிலை பராமரிப்பு வழங்கலை வலுப்படுத்த பல கொள்கை பரிந்துரைப்புகளை அதுல்யா சீனியர் கேர் கொண்டிருக்கிறது. மாறுநிலை பராமரிப்புக்கு தரநிலைப்படுத்தப்பட்ட நெறிமுறைகளை உருவாக்குவது, உடல்நல பராமரிப்பு பணியாளர்கள் மத்தியில் வெவ்வேறு துறைகள்/பிரிவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பது மற்றும் உடல்நல சிகிச்சை வழங்குனர்களுக்கு இலக்குடன்கூடிய பயிற்சி மற்றும் கல்விக்கான வாய்ப்பை உறுதிசெய்வது ஆகியவற்றை அதுல்யா சீனியர் கேர் வலியுறுத்துகிறது. அவசியமான ஆதாரவளங்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டிருக்கும் பிரத்யேக மாறுநிலை பராமரிப்பு அமைவிடங்களை நிறுவ வேண்டும் என்றும் அதுல்யா சீனியர் கேர் வலியுறுத்துகிறது. மேலும், இந்த இன்றியமையாத சேவைகளுக்கான தேவையை அதிகரிக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதுல்யா சீனியர் கேர் அறைகூவல் விடுக்கிறது.
இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கு சிகிச்சை விளைவுகள் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் குறிக்கோளுடன் அதுல்யா கேர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. எண்ணிக்கையில் வேகமாக அதிகரித்துவரும் முதியவர்களுக்கு, நோய் பாதிப்புகளிலிருந்து வெற்றிகரமாக மீள்வதற்கு அவர்களுக்கு தேவைப்படும் பராமரிப்பையும், சிகிச்சை ஆதரவையும் வழங்குவது மீது இந்நிறுவனம் கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்கு ஒரு நேர்த்தியான சாட்சியமாக இந்த தனிச்சிறப்பான மாறுநிலை பராமரிப்பு சேவைகள் திகழ்கின்றன.