June 16, 2023 தண்டோரா குழு
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்களுக்கு கோவை மண்டல தலைமை பொறியாளர் வினோதன் கூறியிருப்பதாவது:
தரமான ஐஎஸ்ஐ குறீயீடு பெற்ற மின்சாதனங்களை உபயோகிக்கவும், மின் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீசியனை கொண்டு பணி செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மின் கம்பிகள் மற்றும் இழுவை கம்பிகளில் ஈரத்துணிகளை உலர்த்தகூடாது. மின் நுகர்வோர்கள் தங்களது மின் வயரிங்குகளை முறையாக ஆய்வு செய்து பழுதடைந்த வயரிங்குகளை புதுப்பிக்க வேண்டும். மின் இணைப்பில் ஆர்.சி.டி-யை பொருத்த வேண்டும்.
கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் பொழுது அருகில் மின்பாதைகள் இருப்பின் உரிய இடைவெளியோடும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் பணிகள் மேற்கொண்டு விபத்தினை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.