January 18, 2017 findmytemple.com
சுவாமி : அருள்மிகு நவநிதேஸ்வரர்(சிங்கராவேலர்)
மூர்த்தி : சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி)
தீர்த்தம் : ஷீரா புஷ்கரிணி எனும் பாற்குளம்
தலவிருட்சம் : மல்லிகை
தலச்சிறப்பு :
இத்தலத்திற்குவரும்உலகபக்தர்களின்சிக்கல்களைதீர்த்துவைக்கும்தெய்வமாகஉள்ளதால்இத்தலத்திற்குசிக்கல்எனபெயர்கொண்டது என கூறுகின்றனர். இங்கே தான் சூரபத்மனை வதம் செய்வதற்காக வந்த சிங்காரவேலனுக்கு அன்னை வேல் கொடுத்து ஆசிகள் வழங்குகிறாள். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சஷ்டித் திருவிழா நடைபெறும்போது வேல்வாங்கும் விழாவில் தாயிடம் வேல் வாங்கிக் கொண்டு முருகப் பெருமான் தன் கோயிலுக்கு வந்து அமர்ந்த பின்னால், வேலின் வீரியம் தாங்காமல் சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகும் காட்சி இன்றளவும் நடைபெறுகிறது. பட்டுத் துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை பெருக்கெடுக்கும் என்று சொல்கின்றார்கள். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்ற வழக்குச் சொல்லும் இருக்கிறது.
தல வரலாறு :
இக்கோவில் ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையானது. வசிஷ்டர் ஆசிரமம் இருந்த இடம் என்று தலவரலாறு சொல்கிறது. ஈசனைத் தினமும் வழிபட்டு வந்தாராம் வசிஷ்டர். அப்போது காமதேனு ஒரு சாபத்தின் காரணமாக பூமிக்கு வந்தது. இங்கே இருந்த தீர்த்தத்தில் நீராடியது. நீராடும்போது காமதேனு பாலைச் சொரிய, அந்தப் பால் பெருகி குளமே பாற்குளமாக மாறியது.பெருகி வந்த பாலில் இருந்து உருண்டு, திரண்டு வந்த வெண்ணெயை எடுத்து வசிஷ்டர் சிவலிங்கமாக்கி வழிபட்டார். வழிபாடு முடிந்ததும், வெண்ணெய் லிங்கத்தை எடுக்க முனைந்தார். லிங்கத்தை அவரால் எடுக்கமுடியாமல் போக ,வெண்ணெய் லிங்கம் அவர் கையிலேயே சிக்கிக் கொண்டது. சிக்கிக்கொண்ட இடமாதலால் சிக்கல் எனப் பெயர் பெற்றது என்று சொல்படுகிறது. ஈசனின் திருமேனி வெண்ணெய்த் திருமேனி என்றும் நவநீதேஸ்வரர், திருவெண்ணெய்நாதர் என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறார்.
நடைதிறப்பு : காலை 5.00 மணிபகல் 12.30 மணிவரை, மாலை 4.00 மணிமுதல்இரவு 9.00 மணிவரை
பூஜைவிவரம் : ஆறுகால பூஜைகள்
திருவிழாக்கள் : கந்தசஷ்டி – சிறப்பு, சித்திரை பிரம்மோற்சவம் , மாதாந்திர கார்த்திகை வழிபாடு சிறப்பு தரும்.
அருகிலுள்ள நகரம் : நாகப்பட்டினம்
கோயில்முகவரி : அருள்மிகு நவநிதேஸ்வரர் திருக்கோவில், சிக்கல் அஞ்சல்-611108. நாகை மாவட்டம்.