• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஜூன் 23ம் தேதி முதல் வ.உ.சி., மைதானத்தில் தி கிரேட் பாம்பே சர்க்கஸ் துவக்கம்

June 21, 2023 தண்டோரா குழு

கோவையில் வரும் ஜூன் 23ம் தேதி வ.உ.சி., மைதானத்தில் தி கிரேட் பாம்பே சர்க்கஸ் துவங்க உள்ளது. ஒரு மாதத்திற்கு மேல் நடக்க உள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தி கிரெண்ட் ரிஜென்டில் நடைபெற்றது.

இதுகுறித்து கிரேட் பாம்பே சர்க்கஸ் நிறுவனத்தின் பார்ட்னரான சஞ்சீவ் கூறுகையில்,

கோவையில் தி கிரேட் பாம்பே சர்க்கஸ் கடைசியாக 2017ம் ஆண்டு வ.உ.சி., மைதானத்தில்நடத்தியது. தற்போது கொரோன கால கட்டத்திற்கு பிறகு மீண்டும் எங்கள் சர்க்கஸ் நிகழ்ச்சி வரும் ஜூன் 23ம் தேதி துவங்கி ஒரு மாதத்திற்கு மேல் நடக்க உள்ளது. ஒவ்வொரு நாளிலும் மதியம் 2:00 மணி, மாலை 4:00 மணி மற்றும் இரவு 7:00 மணி என மூன்று காட்சிகள் நடத்தப்படும்.

ஒவ்வொரு காட்சியும் 2 மணி நேரம் 20 நிமிடம் நடக்கவுள்ளது.30க்கும் மேற்பட்ட சாகசங்கள் நடக்க உள்ளது.வியக்கவைக்கும் புது சகாசங்களுடன், புது குழுவுடன் புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் காண உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக உலக சர்க்கஸ் போட்டிகளில் பங்கு பெற்று வெண்கல பதக்கம் பெற்ற எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

மணிப்பூரிலிருந்து 8 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும் இந்தியா மற்றும் நேபாளாகிய நாடுகளில் இருந்து வரக்கூடிய புகழ்பெற்ற கலைஞர்களும் இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் பலவிதமான சாகசங்களை செய்து காண்போரை ஆச்சரியத்துக்குள்ளாக்க காத்திருக்கின்றனர்.

மேலும், இங்கு கிளப் ஜக்லிங்க், ரோலர் ஆக்ட், ஜிம்னாஸ்டிக் கண்டேஜியன், டவர் பேஸ்கட்பால் போன்ற பல்வேறு சாகசங்கள் இடம் பெற உள்ளன. இதற்கான டிக்கெட் விலைகளை முன்பதிவு செய்து அதற்கான அறிவிப்புகள் விளம்பரங்களாக வெகுவிரைவில் வெளியாகும்.டிக்கெட்களின் விலை ரூபாய் 100 முதல் 400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் படிக்க