• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கி.மீ. செல்லும் – பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 பைக் கோவையில் அறிமுகம் !

June 23, 2023 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பிஎன்சி மோட்டார்ஸ் ‘இன்டோஷெல் பிஎன்சி’ என்னும் பெயரில் முதல் அனுபவ மையத்தை கோவையில் திறந்துள்ளது. சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இந்த மையத்தை இன்டோஷெல் மோல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெகதீசன் திறந்து வைத்தார்.

இது குறித்து பிஎன்சி மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி நாராயணன் கூறுகையில்,

எங்களின் சொந்த ஊரான கோவையில் எங்களின் புதிய டீலர்ஷிப்பை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் இருசக்கர வாகனங்களில் உள்ள பேட்டரியானது இந்தியாவில் உள்ள பிற இரு சக்கர வாகனங்களின் பேட்டரியைவிட சிறந்ததாகும். மேலும் எங்களின் வாகனங்கள் நவீன தொழில்நுட்பத்தில் மிகவும் புதுமையான சேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கட்டமைப்புடன் உலகத் தரத்தில் தயாரிக்கப்படுகின்றன.

எங்களின் வாகனங்கள் இங்கேயே தயாரிக்கப்படுகின்றன.மேலும் இந்த வாகனங்களுக்கான 75 சதவீத உதிரி பாகங்களும் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன.மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் சிறந்த இடத்தை அடைவதற்காக எங்கள் நிறுவனம் தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்தியல் கோவை நகரை உலக அளவில் சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் நாங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். கோவையை பொறுத்தவரை புதுமை மற்றும் தொழில்முனைவோருக்கு பெயர் பெற்ற நகரம் ஆகும். எனவே மக்களின் ஆதரவுடன் இதை எங்களால் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

தற்போது பிஎன்சி நிறுவனம் பிஎன்சி சேலஞசர் எஸ்110 என்ற மோட்டார் சைக்கிளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் 2 புதிய வாகனங்களை அறிமுகம் செய்தது. அவை வரும் டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளது. சேலஞ்சர் எஸ்110 உயர் செயல்திறன் கொண்ட மின்சார வாகனமாகும், இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டு இருப்பதோடு, இது சிறந்த தரம் மற்றும் தனித்துவமான தன்மையைக் கொண்டுள்ளது.

சிங்கிள் சார்ஜ் முறையில் இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கி.மீ. செல்லும். இது மணிக்கு 75 கி.மீ. வேகம் செல்லும் திறன் கொண்டது.பிஎன்சி சேலஞ்சர் எஸ்110, லிங்க் ஆண்டி டைவ் சஸ்பென்ஷன் சிஸ்டம், சின்க்ரோ டிஸ்க் பிரேக்குகள், இருக்கைக்கு அடியில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட இட வசதி, ஆல் டெரெய்ன் திறன்கள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட ஜிபிஎஸ் சிஸ்டம் உள்ளிட்ட 4 சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் எக்ஸ்–ஷோரூம் விலை 1,18,225 ரூபாய் ஆகும்.

இது பாந்தர் பிளாக், அஸூர் ப்ளூ, கிரிம்சன் ரெட் மற்றும் கமாண்டோ கிரீன் ஆகிய 4 வண்ணங்களில் வருகிறது. கழட்டும் வசதி கொண்ட/ஸ்வாப்-ரெடி 2.1 கிலோவாட் எட்ரோல் 40 பேட்டரியை நிலையான 3 பின் 6ஏ சாக்கெட் மூலம் எங்கும் சார்ஜ் செய்ய முடியும், 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாகும். எட்ரால் 40 அனைத்து கடுமையான தொழில்துறை சோதனைகள் செய்யப்பட்டு இந்தியாவில் பாதுகாப்பான பேட்டரியாக உள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்த பேட்டரி ஆகும்.

மேலும் தகவலுக்கு, www.bncmotors.in என்ற இணையதளத்தை பார்க்கவும் அல்லது +91 9790007107 என்ற எண்ணில் அழைக்கவும்.

மேலும் படிக்க