June 23, 2023 தண்டோரா குழு
தென்னிந்திய அளவில் கவர்ச்சிரமான, முக்கிய நகை கண்காட்சி மற்றும் விற்பனை கண்காட்சியின் 47 வது பதிப்பு, கோவை, ரேஸ்கோர்ஸ்சில் உள்ள தாஜ் விவாந்தா ஹோட்டலில் இன்று துவங்கியது.ஜூன் 23, 24, 25 ஆகிய நாட்களில் நடக்கும் இந்த காண்காட்சி காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடக்கிறது.
தனித்துவமிக்க இந்த கண்காட்சியில் முதல் முறையாக முன்பு எப்போதும் பார்த்திராத சிறப்பான நகை வடிவமைப்புகளை காண முடியும்.
கண்காட்சியை சிறந்த நகை, ஆடை வடிவமைப்பாளர் அபர்ணா சுங்கு மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கான சிறந்த விருதினை பெற்றவரும் கபே டாட்டரம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ரஞ்சனா சிங்கால் ஆகியோர் துவக்கிவைத்தார்கள்.
ஆசியா நகை கண்காட்சியானது, உயர்தர நுண்கலைக்கு பெயர் பெற்ற தங்க நகைகள் மற்றும் வைர நகைகளுக்கு புகழ் பெற்றது. கண்காட்சியில்,நவீன தற்போதை கலெக்சன்களாக, தங்கம், வைரம், பிளாட்டினம்,திருமண நகைகளும் இடம் பெற்றுள்ளன.பாரம்பரிய அரிய வகை கற்கள், குந்தன், ஜடாவு, பொல்கி நகைகளும், வெள்ளியில் செய்த நகைகளும் இடம் பெற்றுள்ளன.
நகரில் நடக்கும் மிக நுட்பமான கண்காட்சியில் ஒன்றாக இது இருக்கும். இந்த கண்காட்சியில் நகைகளை நேரடியாக வாங்கலாம் அல்லது முன்பதிவு செய்து கொள்ளலாம். கல் பதித்த சிறப்பான வடிவமைப்பு கொண்ட நகைகள் இடம் பெற்றுள்ளன. உலகத்தரம் வாய்ந்த நகைகளை தென்னிந்திய அளவில் வாங்க இந்த கண்காட்சி ஒரு சிறப்பான இடத்தை வகிக்கிறது.
பெங்களுரு,மும்பை மற்றும் டில்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத் மற்றும் கோவையில் உருவாக்கப்பட்ட மிகவும் கவர்ச்சிகரமான அனைத்து பிராண்ட் நகைகளையும் பெறலாம்.நேர்த்தியான வடிவைமப்புக கொண்ட சர்வதேச தரத்திலான நகைகளை இந்தியா அளவில் பெற்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.