June 25, 2023 தண்டோரா குழு
கோவை ஜெங்கம்மநாயக்கன்பாளையம் (நவாம்ஸ) அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூன் 25-ம் தேதி) வெகு விமர்சையாக நடைபெற்றது
கோயம்புத்தூர் வடக்கு மாவட்டம், குருடம்பாளையம் கிராமம்,துடியலூர் அடுத்துள்ள ஜங்கம்மநாயக்கன்பாளையம் (நவாம்ஸ)அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில் ஜூர்ணோத்தாரண ரஜதபந்தன (ஸம்ப்ரோக்ஷண) மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூன் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை – சோபகிருது வருடம் ஆனி மாதம் 10- நாள்) காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற்றது.
மேலும் ஸ்ரீ அரசமரத்து ஆனந்த விநாயகர், ஸ்ரீ சொர்ண கால பைரவர், நவக்கிரகம் மற்றும் ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ ராமச்சந்திர சுவாமி உட்பட அனைத்து விமானங்களும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் பஜ்ரங்கி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக இதற்கான நிகழ்ச்சிகள் கடந்த 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு துவங்கியது.இன்று ஜூன் 25 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மங்கள இசை, சுப்ரபாதம்,அக்னி ஆராதனம், கால சாந்தி, பிரதான ஹோமம்,மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம்,கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 8.00 மணியிலிருந்து மகா அன்னதானம் நடைபெற்றது.
இது குறித்து நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில் தலைவர் செல்வராஜ் கூறும்போது :-
ஒன்பதுவிதமான அம்சத்துடன் அருள்பாலித்து வரும் நவாம்ஸ ஶ்ரீ ஆஞ்சநேயரின் சிறப்பு அம்சமானது
1. வரம் தரும் வலது உள்ளங்கையில் மகாலட்சுமி. 2.ஆஞ்சநேயருக்கு வரம் தந்த தசரத மைந்தன், சீதாதேவி 3. வடக்கு நோக்கிய முகம் வராஹமுக தரிசனம். 4.ஆஞ்சநேயர் கொண்டு வந்த சாலாக்கிராமம் கோபுரம் 5.சிவபெருமானின் ஒளிவட்டத்தில் அஞ்சனை புத்திரன்.6. நவக்கிரஹதோசம் விலக வாலில் மணி. 7. துஷ்டர்களை அழிக்க இடது கரத்தில் கதாயுதம். 8. ஆஞ்சநேயருக்கு அதிர்ஷ்டமான 8 அடி கருவரை. 9. பக்தரை சுவர ஸ்ரீபால சஞ்சீவி கொண்டு நவ அம்சங்களுடன் அருள் பாலிக்கும்
நவாம்ஸ ஆஞ்சநேயரை வணங்கினால்
சகல காரியங்களும் சித்தியடையும்.
இந்த கும்பாபிஷேக விழாவை யாக சாலை ஸர்வ சாதகம் :
ஸ்ரீ வைக்கானஸ ஆகம ரத்னா சோளிங்கர் ஸ்ரீ ஸ்ரீ ராம் பட்டாச்சாரியார் அவர்கள் தலைமையில் தல அர்ச்சகர் அகம ரத்னா கரம் சிவ ஸ்ரீ மெய்கண்ட சிவ சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைத்தார்கள்.தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஸ்ரீ ராமர் சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜைகளும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் குருடம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொது மக்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.