June 26, 2023
தண்டோரா குழு
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை தொடர்ந்து,இன்று மாலை 3 மணி அளவில் புகையிலை விழிப்புணர்வு பேரணி
கோவை நவக்கரையில் அமைந்துள்ள A.J.K கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் Dr. மோகனவேல் மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டு மைய உளவியலாளர் M. தௌபிக் முன்னிலையில் புகையிலை விழிப்புணர்வு,உறுதிமொழி,பேரணி, கையேடு விழிப்புணர்வு நடைபெற்றது.
இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நவக்கரையில் மனித சங்கிலி மூலம் மாணவர்கள் ஏற்படுத்தினர். இளைய தலைமுறை மாணவர்களின் இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் அனைவர்க்கும் பயனுள்ள வகையில் அமைந்தது.