• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனியார் பள்ளியில் தமிழ் மொழி கற்று தர வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

June 26, 2023 தண்டோரா குழு

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் 12631 மெட்ரிகுலேசன் பள்ளிகள்,மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள்,சுயநிதி உயர்நிலை பள்ளிகள், சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், இளம் மழலையர் பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டம் அல்லாத பிற பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இவ்வகையான தனியார் பள்ளிகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பள்ளியின் அங்கீகாரத்தினைப் புதுப்பித்து ஆணை பெற்று செயல்பட்டு வருகின்றன. மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் பயன்பெறும் வகையில் மண்டல வாரியாக அங்கீகாரச் சான்றுகளைப் புதுப்பித்து ஆணை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முதற்கட்டமாக திருச்சி அரியலூர், திண்டுக்கல் கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர், மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளடக்கிய பத்து மாவட்டங்களைச் சார்ந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரச் சான்றுகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் 30.04.2023 அன்று திருச்சியில் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவை, ஈரோடு நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் உள்ளடக்கிய ஐந்து மாவட்டங்களைச் சார்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவை, வெங்கடேசபுரம், புவனேஷ்வரி நகரில் உள்ள தனியார் பள்ளியில் அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில்,தனியார் பள்ளிகள் இயக்குநர் எஸ்.நாகராஜ் முருகன் வரவேற்புரையுடன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விழாப்பேருரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்:

இந்த விழாவிற்கு 5 மாவட்டங்கள் 350 தனியார் பள்ளி நிர்வாகிகள் தாளாளர்கள் வந்து உள்ளனர்.தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை ஜூன் 30-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் 10 மாவட்டங்கள் உள்ளடக்கிய பள்ளிகளுக்கு இந்த ஆணையை வழங்கினோம்.

2022 – 20 23 அங்கீகார ஆணை முடிவுற்ற நிலையில் உள்ள பள்ளிகள் உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள்.கல்விப் பணி அனைத்திற்கும் மேலானது.மாணவ செல்வங்களை நல்ல மனிதனாக ஆக்குவது பள்ளிக்கூடங்கள்.அப்படிப்பட்ட இந்த பள்ளிகளுக்கு ஆணை வழங்குவது எனக்கு பெருமையாக உள்ளது.

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் எங்கள் மாணவர்கள் தான், அதனால் தான், தனியார் பள்ளிகளையும் கவனம் செலுத்துகின்றோம்.ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் திரைப்படத்தின் மூலமாக கருத்தை பெற்று வருகிறார்கள்.
தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி கட்டணம் செலுத்தாவிட்டால்,அனைத்து தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது கைவிட வேண்டும். அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தனியார் பள்ளியில் தமிழ் மொழி கற்று தர வேண்டும். தமிழ் மொழியை தனியார் பள்ளிகளில் கொண்டு செல்ல நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து,அங்கீகார ஆணைகளை பள்ளித் தாளாளர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களிடம் அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்’மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், எம்பி சண்முகசுந்தரம், துணைமேயர் வெற்றிசெல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க