• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அன்பையும்_மனிதநேயத்தையும் அனைவர் மனதிலும் விதைப்போம்…!!

June 29, 2023 தண்டோரா குழு

மஜக கோவை மாவட்ட செயலாளர் TMS அப்பாஸ் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில்,

இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஹஜ்ஜூப் பெருநாள் எனும் தியாகத்திருநாள் உலக முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது.

மேலும்,உயர்ந்தவர்,தாழ்ந்தவர்,கருப்பர், வெள்ளையர் மற்றும் இனம்,மொழி பாகுபாடு இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் புனிதமிகு மக்கா நகரில் ஒன்று கூடி தமது இறுதிக் கடமையை நிறைவேற்றுகின்ற இந்தப் பெருநாள் தினத்தில்

மனிதர்களில் ஒருவருக்கொருவர் காட்டுகின்ற பாகுபாடுகள்,வெறுப்புகள் நீங்க அன்பையும், மனித நேயத்தையும் அனைவர் மனதிலும் விதைக்க வேண்டும். உலகில் வாழுகின்ற கடைசி மனிதனும் உயர்வு பெற வேண்டும்.

அதற்காக உழைப்போம் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திப்போம். அனைவருக்கும் தியாகத் திருநாள் எனும் ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க