• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு சிறந்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

July 1, 2023 தண்டோரா குழு

கோவைப்புதூரில் உள்ள சிபிஎம் கல்லூரியில் அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி மற்றும் சிபிஎம் கல்லூரி இணைந்து உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர் எஸ் மீரா கலந்து கொண்டார்.அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் மாவட்ட ஆளுநர் ஸ்ரீனிவாச கிரி முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிபிஎம் கல்லூரி முதல்வர் சிங்காரவேலு,தி ஹிந்து நாளிதழ் பொது மேலாளர் சிவக்குமார், முதல் துணை மாவட்ட ஆளுநர் ராஜன், மண்டல தலைவர் பிரியா எஸ் கிரி, வட்டார தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தொடர்ந்து மருத்துவத் தறையில் சிறந்த சேவையை வழங்கி வரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிறந்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் நுரையீரல் மருத்துவ நிபுணர் டாக்டர் மோகன் குமார், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஸ், இறப்பை குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர் பார்த்தசாரதி,பொது அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார், சிறுநீரகவியல் மருத்துவ நிபுணர்கள் அருள் மற்றும் தினகரன் பாபு, மருத்துவர்கள் மோகன்ராஜ், சுந்தரேசன்,வெங்கடேஷ், சித்ரா, கீர்த்தி மற்றும் நிர்மலா தேவி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முன்னதாக, கல்லூரி வளாகத்தில் அலையன்ஸ் கிளப் கோயம்புத்தூர் மாவட்ட ஆளுநர் ஸ்ரீனிவாச கிரி மரக்கன்று நட்டு வைத்தார்.நிகழ்ச்சியில் அலையன்ஸ் கிளப் ஆப் ஹில் சிட்டி தலைவர் டி எஸ் குட்டன், செயலாளர் குமரேசன் மயில்சாமி, பிஆர்ஓ சரவணன் ராஜா மற்றும் நிர்வாகிகள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க