January 18, 2017
தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடந்த சில நாட்களாகத் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது “டுவிட்டர்” பக்கத்தில் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.
மார்கண்டேய கட்ஜு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.