July 5, 2023 தண்டோரா குழு
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து,போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் இன்று சூலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட,புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தர்ஜரம்(30) மற்றும் கோவையைச் சேர்ந்த பேரரம்(46) ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,95,677 மதிப்புள்ள 247 கிலோகிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைபறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 208 நபர்கள் மீது 197 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடமிருந்து சுமார் 2757.3 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.