• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெம் மருத்துவமனை சார்பில் சர்வதேச அளவில் அதிநவீன லேப்பராஸ்கோப்பி சிகிச்சை செயல்முறை மாநாடு

July 7, 2023 தண்டோரா குழு

ஜெம் மருத்துவமனை சார்பில் “லேப்ரோசர்ஜ்” மாநாட்டின் 9வது பதிப்பு கோவையில் நடந்தது.

இந்த மாநாட்டில் சர்வதேச அளவிலான இந்த மாநாட்டில், அறுவை சிகிச்சை நேரடி செயல்விளக்க முறைகள், பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பங்கேற்றனர்.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஜெம் மருத்துவமனையிலிருந்து, மாநாடு நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்திற்கு 60 அறுவை சிகிச்சை முறைகள் நேரடியாக ஒளிபரப்பாகின்றன. மாநாட்டில் நடக்கும் கண்காட்சியில் குறைந்தபட்ச கருவிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்ய தேவையான கருவிகள், 125 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு செவிலியருக்கான பயிற்சிகள், விலங்குகள் பரிசோதனை நிலையம், என்டோஸ்கோபி பயிற்சி, அறுவை சிகிச்சை அரங்கு, வீடியோ எடிட்டிங் மற்றும் ஆவணப்படுத்துதல் போன்றவைகளை அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டினை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், இந்திய நவீன கருவிகள் அறுவை சிகிச்சை மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் சிஜே வர்கீஸ் துவக்கி வைத்தனர். இதில் ஜெம் மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் சி.பழனிவேலு, நாடு முழுவதும் நுண்துளை அறுவை சிகிச்சை முறையை கற்பதில் உள்ள சிக்கல்களை களைய, லேப்ரோசர்ஜ் மாநாடு எவ்வாறு உதவியது என்பது பற்றி விளக்கினார்.

ஜெம் மருத்துவமனையின் இணை இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜ், இது போன்ற மாநாடுகள் அறுவை சிகிச்சையின் தரத்தை உயர்த்தவும், அறுவை சிகிச்சையை மறுஆய்வு செய்யவும் வாய்ப்பாக அமையும் என்றார்.

மேலும் படிக்க