• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பங்களிக்கும் ஏபிபி இந்தியா!

July 7, 2023 தண்டோரா குழு

ஏபிபி இந்தியாவின் ஆற்றல் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு திறமையான தீர்வுகளுடன் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கிறது.

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஏபிபி இந்தியா, தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கு தீவிரமாக பங்காற்றி வருகிறது. ஏபிபி யின் ஆற்றல் திறன் கொண்ட மோட்டார் மற்றும் டிரைவ் தீர்வுகள், ஆற்றல் திறனை செயல்படுத்துதல், கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல் ஆகிய முன்னணி தொழில்களில் பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கி மாற்றத்தை செலுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன.

“ஏபிபி யின் ஆற்றல்-திறனுள்ள தீர்வுகள், நிலையான வளர்ச்சியை நோக்கிய தமிழகத்தின் பயணத்திற்கு பங்களிக்கின்றன. நாங்கள் வழங்கும் புதுமையான டிரைவ்கள் மற்றும் மோட்டார் தமிழகத்தில் ஜவுளித் தொழில்கள், கார்மென்ட் பிரிண்டிங் தொழில், சுரங்கம் மற்றும் கட்டுமானம் ஆகியவற்றை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல் பசுமையான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது. எங்கள் நிபுணத்துவம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், இந்தத் துறைகளை மிகவும் திறமையாக செயல்படவும், அவற்றின் கார்பன் தடத்தை குறைக்கவும், வளத்தின் பயன்பாட்டை மேம்படுத்தவும் நாங்கள் அதிகாரம் அளிக்கிறோம்.

தமிழ்நாட்டின் திறனை வெளிக்கொணர நிலையான வளர்ச்சியே முக்கியமானது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மேலும் இந்த மாற்றத்தில் நம்பகமான நிறுவனமாக இருப்பதில் ஏபிபி உறுதியாக உள்ளது“ என்று ஏபிபி இந்தியாவின் வர்த்தக இயக்க தலைவர் சஞ்சீவ் அரோரா கூறினார்.

டெக்ஸ்டைல் அப்ளிகேஷன்: தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி நூற்பாலைகளுக்கு 3000க்கும் மேற்பட்ட ஆற்றல் திறன் கொண்ட மோட்டார்கள் மற்றும் டிரைவ்களை ஏபிபி வினியோகம் செய்துள்ளது. இது வழக்கமான அமைப்புகளுடன் ஒப்பிடுகையில் 20-35% கணிசமான ஆற்றல் சேமிப்பை செயல்படுத்துகிறது. பல்வேறு ஆற்றல் மதிப்பீடுகளை கொண்ட இந்த மோட்டார்கள் மற்றும் டிரைவ்கள் ஈரப்பதமூட்டும் ஆலை, நியூமாஃபில் மற்றும் காம்பாக்ட் சக்சன் ஃபேன் மற்றும் ரிங் ஃபிரேம் இயந்திரங்கள் போன்ற அப்ளிகேஷன்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரிஜினல் உபகரண உற்பத்தியாளர்களுடன் (ஓஇஎம்கள்) கூட்டு சேர்ந்து, ஏபிபி ஜவுளித் தொழிலில் ஆற்றல் சேமிப்பு மற்றும் செலவு குறைப்புக்கு பங்களித்துள்ளது.

கார்மென்ட் பிரிண்டிங்: ஏபிபி டிரைவ்ஸ் தொழில்நுட்பம், கார்மென்ட் பிரிண்டிங்கில் உற்பத்தி திறனையும், தரத்தையும் மேம்படுத்தியுள்ளது. திருப்பூரில் 65% பின்னலாடை கார்மென்ட் தானியங்கி பிரிண்டிங் இயந்திரங்களில் பிரிண்டிங் பணிகளில் இதை பயன்படுத்தி வருகின்றனர். மெட்டீரியல் கையாளுதல், நூற்பு, ஈரமான மற்றும் உலர் செயல்முறை கட்டுப்பாடு உள்பட பல்வேறு அப்ளிகேஷன்களில் ஏபிபி ஜவுளி ஆட்டோமேஷன் முயற்சிகளை தொடர்ந்து வழிநடத்துகிறது.

சுரங்கம் மற்றும் கட்டுமான தொழில்: மீள் மற்றும் நம்பகமான ஏபிபி டிரைவ்ஸ் மற்றும் மோட்டார் தீர்வுகள் சுரங்க மற்றும் கட்டுமானத் துறையில் வேலையில்லா நேரத்தை குறைத்து, உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் சுமார் 50% ஸ்டோன் கிரஷர்ஸ் ஏபிபி யால் பயனடைகின்றன. அவை மென்மையான தொடக்கம், உயர் தொடக்க சுழற்சி, குறைக்கப்பட்ட பராமரிப்பு செலவுகள் மற்றும் நீடித்த கிரஷர்ஸ் லைஃடைம் ஆகியவற்றை வழங்குகிறது. ஓஇஎம்கள் மற்றும் பேனல் பில்டர்கள் மூலம் வழங்கப்படும் இந்த தீர்வுகளில் 5000 மோட்டார்கள் மற்றும் 2500 டிரைவ்கள் அடங்கும்.

விவசாய துறை: ஏபிபி யின் சோலார் பம்ப் டிரைவ்கள் கிரிட் மீது சார்ந்திருப்பதை குறைக்கவும், நிலையான விவசாய நடைமுறைகளை மேம்படுத்தவும் உதவுகின்றன. இந்தியா முழுவதும் ஏபிபி 33,000 டிரைவ்களை வழங்கியுள்ளது. இதில் 15,000 சோலார் பம்புகள் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு ஓஇஎம்கள் மற்றும் இபிசிகள் மூலம் வழங்கப்படுகின்றன.

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஏபிபி பல நிறுவல்களை எளிதாக்கியுள்ளது. இந்த முன்முயற்சி இந்திய அரசாங்கத்தின் KUSUM திட்டத்துடன் ஒத்துப்போகிறது. பம்ப் மோட்டார் செயலற்ற காலங்களில் அல்லது அதிகப்படியான சூரிய சக்தி கிடைக்கும் போது கிரிட் ஏற்றுமதிக்கு சூரிய சக்தியை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
வேளாண்மை நுண்ணுயிர் நீர்ப்பாசன திட்டம்: ஏபிபி யின் ஆற்றல்-திறனுள்ள தீர்வுகள் நிலையான விவசாயத்தை ஆதரிப்பதிலும், உகந்த நீர் பயன்பாட்டை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒருங்கிணைந்த டிரைவ்ஸ் மற்றும் மென்மையான ஸ்டார்ட்டர் தீர்வுகள் சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள நுண்ணுயிர் பாசன நிலையங்களில் இருந்து நீரை இறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டு முழுவதும் 2500 ஹெக்டேருக்கு மேல் வளமான நிலத்தில் பயிரிடும் 1500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைகின்றனர்.

தமிழ்நாட்டில் தொழில்கள் சந்திக்கும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளுடன் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்க ஏபிபி இந்தியா உறுதியுடன் உள்ளது. அதன் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மூலோபாய கூட்டாண்மை மூலம், ஏபிபி தொடர்ந்து பல்வேறு துறைகளில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க