January 18, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசியதாவது:
“உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு, மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்தாலும், அதையும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்ய முடியும்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தும் இந்தப் போராட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி சில அமைப்புகள் சூழ்ச்சியில் ஈடுபடும் வாய்ப்புள்ளது.
மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் பிற இயக்கத்தினர் தலையிடுவது ஏன்? எனவே, சூழ்ச்சி இருப்பதால் மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட ஒன்றை நடத்தினால் அது போராட்டம்தான், ஜல்லிக்கட்டு இல்லை“
இவ்வாறு அவர் பேசினார்.