July 11, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை கமிஷனர் சிவகுமார் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.
இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 4 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 3 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 9 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 2 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 9 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 4 மனுக்களும் என மொத்தம் 31 மனுக்களை பொதுமக்கள் மேயரிடம் அளித்தனர்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மண்டல உதவி கமிஷனர்கள், உதவி கமிஷனர் (வருவாய்), செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.