• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை தனியார் நிறுவனத்தின் 3 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து: பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

July 12, 2023 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலை சந்திப்பு பகுதியில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தனியார் நிறுவனம் ( Vasanth and co) செயல்பட்டு வருகிறது.ஒரே கட்டிடத்தில் தனியார் உணவகம் ( ஆனந்தாஸ்), செல்போன் கடை (Chennai mobile) உள்ளிட்ட கடைகளும் செயல்பட்டு வரும் நிலையில் உணவகம் கட்டிடத்தில் பணிகள் நடைபெற்று வந்தது. அதில் கேஸ் வெல்டிங் பணி செய்யும் போது அங்கு இருந்து தீப்பொறி அருகில் மூன்றாவது தளத்தில் செல்போன் கடைசியில் வைக்கப்பட்டு உள்ள ஏ.சி இயந்திரத்தில் தீப்பொறி பட்டு விபத்து ஏற்பட்டு உள்ளது.

மேலும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தனியார் நிறுவனம் ( Vasanth and co) அதன் அருகே வைத்து இருந்த அட்டைப் பெட்டிகள் மீது பட்ட தீ மேலும் பரவியது இதனால் அங்கு பெரும் புகை மூட்டம் கிளம்பியதைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் இரண்டு வாகனங்கள் மூலம் தீ மேலும் பரவாமல் அனைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர்.

தீ விபத்தால் ஏ.சி இயந்திரங்கள் மற்றும் அங்கு வைக்கப்பட்டு இருந்த அட்டைப் பெட்டிகள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன. கட்டிடத்தின் அருகே அடுத்தடுத்து கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் துரிதமாக தீ அணைக்கப்பட்டதால் தீ எங்கும் பரவாமல் தடுக்கப்பட்டதுடன் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க