July 12, 2023 தண்டோரா குழு
கோவை வட்டமலைபாளையத்தில் இயங்கி வரும் கங்கா செவிலியர் கல்லூரியில் தேசிய செவிலியர் சங்கத்தின் சார்பில் முப்பதாவது ஆண்டு மண்டல அளவிலான டாஸ்னாகாம் கலை மற்றும் கலாச்சார போட்டிகள் (செவிலிய மாணவர்களின் மேம்பாட்டின் சவால்களின் தொகுப்பு) நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிறப்பு விருந்தினர் கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர். எஸ் ராஜா சபாபதி கலந்து கொண்டு போட்டிகளை துவக்கிவைத்தார். இந்த நிகழ்வின் கௌரவ விருந்தினர்களுக்கு சிவப்பு கம்பள மற்றும் பேண்ட் வாத்திய அணிவகுப்பு அளிக்கப்பட்டது நல்லிணக்கத்தின் அடையாளமாக புறாக்கள் உயரமாக பறக்க விடப்பட்டது .
5வது மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்தர் ஜான் தலைமையில் பங்கேற்ற அனைத்து கல்லூரியின் துணைத் தலைவர்கள் இந்த நிபுணருக்கு மிகுந்த மரியாதையுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவிற்கு வந்திருந்தவர்களை கங்கா செவிலியர் கல்லூரியின் அறங்காவலர் ரமா ராஜசேகரன் வரவேற்றார். கங்கா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார்.
கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜே. ஜி. சண்முகநாதன் தலைமை வகித்தார். தேசிய செவிலியர் சங்கத்தின் தமிழ் நாடு கிளை ஐந்தாவது மண்டல பொறுப்பாளர்கள் டாக்டர் ஜெயசுதா மற்றும் தேசிய துணை தலைவர் டாக்டர். ஜெய்னி கெம்ப் இம்மாநாட்டின் கருப்பொருளான “செவிலிய மாணவர்களின் மேம்பாட்டின் சவால்களின் தொகுப்பு” பற்றி விளக்கினர்கள்.
தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர். ஆணி கிரெஸ் கலைமதி வழிகாட்டுதல் பெயரில், தமிழ்நாடு செவிலிய மாணவ கழகத்தின் டாஸ்னாகாம் முப்பதாவது ஆண்டு மண்டல போட்டிகளை ஐந்தாவது மண்டலத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான இக்கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்தர் ஜான் ஏற்று நடத்தினார்.
காலை 7 மணி அளவில் துவங்கப்பட்ட இப்போட்டிகளில் கோவை, நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 செவிலியம் சார்ந்த கல்லுரிகள் மற்றும் பள்ளிகளிலிருந்து பதிவு செய்யப்பட்ட சுமார் 1200 செவிலிய மாணவ – மாணவிகள் சிகை அலங்காரம், காய்கறி செதுக்குதல், கோலமிடுதல், பேச்சு, நடனம் மற்றும் கட்டுரை போட்டி, என 16 வெவ்வேரான தனி மற்றும் குழு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாலையில் நடந்த நிகழ்ச்சி நிறைவு விழாவில் கங்கா செவிலியர் கல்லூரியின் மாணவ தலைவர் வரவேற்புரையாற்ற, கல்லூரி முதல்வர் டாக்டர். எஸ்தர் ஜான் அவர்கள் இந்நாள் நிகழ்ச்சியின் அறிக்கையை வாசிக்க, சிறப்பு விருந்தினரான ரூட்ஸ் கம்பெனி, இயக்குனர் கவிதாசன் மருத்துவ அவரச காலங்களில் செவியிலியர்களின் தொண்டு இன்றியமையாததாக இருந்ததை குறிப்பிட்டு பேசினார். மேலும் தேசிய செவிலியர் சங்கத்தின் ஐந்தாவது மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஜெய சுதா அவர்கள் மண்டல அறிக்கை வெளியிட்டார்.
ஒன்றிணைக்கப்பட்ட நடுவர்களின் மதிப்பீட்டின் படி ஓவ்வொரு போட்டிகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நடுவர்களின் தீர்ப்பின்படி சிறந்த கல்லுரி தேர்ந்தெடுக்கப்பட்டு “சூப்பர் நோவா” கோப்பை வழங்கப்பட்டது. இக்கால சவால் மிக்க செவிலிய துறையில் பண்புடன் பணியாற்ற தேவையான திறன்களை வெளிக்கொண்டு வருவதாக போட்டி நிகழ்ச்சிகள் இக்கல்லூரியில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பல்வேறு கல்லுரியை சேர்த்த போட்டியாளர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.