July 13, 2023 தண்டோரா குழு
கேப்ஸ் கோல்டின் அங்கமான கலாஷா பைன் ஜுவல்ஸ் நிறுவனம் சார்பில் அபர்ணா சுங்க் அவர்களின் தனித்துவமான நுண்கலை நகைகள் கண்காட்சி இன்று ஜூலை 13 முதல் 15 தேதி வரை கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்ஸி டவர் ஓட்டலில் நடக்கிறது.
கேப்ஸ் கோல்டு நிறுவனம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான தங்க நகை விநியோகஸ்தர்கள் ஆவார்கள். கலாஷா பைன் ஜுவல்ஸ் கோவை வாடிக்கையாளர்களுக்காகவே தனித்துவமிக்க நகை கண்காட்சியை கோவையில் நடத்துகிறது. அழகிய கைவினை நகை கண்காட்சி திருமண சேகரிப்புக்காகவே இந்த கண்காட்சி நடைபெறுகின்றது. இவை அனைத்தும் நகை வடிவமைப்பு நிபுணரான அபர்ணா சுங்கு வடிவமைத்தவை ஆகும்.
இக்கண்காட்சி ஜூலை 13, 14, 15 தேதிகளில் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்ஸி டவர் ஓட்டலில் நடக்கிறது. கலஷா நுண்கலை நகைகள், தனித்துவமிக்க கைவினை நகைகளின் சங்கமம், கோவையில் அபர்ணா சுங்குவின் அரிய கண்காட்சி.
கலஷா நுண்கலை நகைகள் கண்காட்சியில் திருமணத்திற்கான சிறப்பு கைவினை நகைகள் பொதுமக்களிடையே மிகவம் பிரபலம். துவக்க விழா நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். ஆனந்தி பாலாஜி (உள்அலங்கார வடிவமைப்பாளர்),தமிழ்செல்வி இமயவரம்பன் (குமரகம் ஸ்மார்ட் வென்யு உரிமையாளர்), சாந்தி செல்வராஜ் (நிர்வாக இயக்குனர், என்ஏவி ஹிந்துஸ்தான் ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட்) மற்றும் காந்திமதி ஜெயக்குமார் (இணை நிர்வாக இயக்குனர், ஜெயச்சந்திரா பேரிங்ஸ் இன்டியா பிரைவேட் லிமிடெட்) ஆகியோர் கலந்து கொண்டு இக்கண்காட்சியை துவக்கிவைத்தார்கள்.