• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காடு வழியாக செல்லும் 24 கிலோ மீட்டர் தண்டவாளத்தை அகற்ற வேண்டும் – ரயில்வே உபயோகிப்பாளர் இயக்கம்

July 15, 2023 தண்டோரா குழு

கோவை ரயில்வே உபயோகிப்பாளர் இயக்கங்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கியமான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து நிர்வாகி சதீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவையின் வளர்ச்சி மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, மதுரை, திருச்சி போல கோவையை தனிக்கோட்டமாக உடனடியாக உயர்த்தி, போத்தனூரில் தலைமையகம் இயங்க அனுமதிக்க வேண்டும். ஆங்கிலேயர் காலத்திலேயே போத்தனூர் தென்னிந்திய ரயில்வேயின் தலைமையிடமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிணத்துக்கடவிலிருந்து பொள்ளாச்சி வரை ரயில்வே பிரிவு தற்போது இருக்கும் பாலக்காடு கோட்டத்தில் இருந்து சேலம் கோட்டத்திற்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். கோவை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, குறைந்தபட்சம் ரூபாய் 1,000 கோடி செலவில் ஏர்போர்ட் போன்ற சகல வசதிகளும் பெற்ற ரயில் நிலையமாக மாற்றப்பட வேண்டும்.

புதிதாக டைடல் பார்க், ஏர்போர்ட், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், நஞ்சுண்டாபுரம், சுந்தராபுரம் சிட்கோ நிறுத்தம் ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.கோவையில் இருந்து ராமேஸ்வரம், தூத்துக்குடி, மதுரை, செங்கோட்டை, திண்டுக்கல் போன்ற ரயில் வழித்தடங்களில் ஓடிக்கொண்டிருந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

ரயில் இயக்கத்தில் டிஜிட்டல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பலன்களைப் பெறவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ‘எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்’ முறையை ரயில்வே ஏற்றுக்கொண்டது. கோவை கோட்டத்தில் முழு தானியங்கி பிளாக் சிக்னலிங் (ஏபிஎஸ்) பிரிவு செயல்படுத்தப்பட வேண்டும், இது அதிக ரயில் சேவைகளை இயக்குவதற்கான வரி திறனை அதிகரிக்கும்.

கோவை முதல் ஜோலார்பேட்டை வரை மணிக்கு 130 கிமீ வேகத்தை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வாளையார் – காஞ்சிக்கோடு ரயில் பாதையில் காட்டு யானைகள் ரயில்களில் அடிபடுவதைத் தடுக்க ஒரே நிரந்தரத் தீர்வு, முழு நீளத்திற்கும் உயர்த்தப்பட்ட ரயில் பாதையாகும், இப்போது 48.26 கிமீ மற்றும் 52.56 கிமீ நீளத்திற்கு இரண்டு மின் பாதைகள் உள்ளன. காடு வழியாக செல்லும் 24 கிலோ மீட்டர் தண்டவாளத்தை அகற்றி, காட்டின் வெளிப்புறத்தில் உள்ள 16 கிலோ மீட்டர் ரயில் பாதையுடன் சேர்த்து உயர்த்தப்பட்ட இரட்டை ரயில் பாதையை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க