July 15, 2023
தண்டோரா குழு
கோவை ஆவரம்பாளையம் சாலையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 62 மதுப்பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்கள்.
கோவை அண்டக்கா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி (43). இவர் கோவை ஆவரம்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் சூப்பரைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் 12 மனிக்கு டாஸ்மாக் கடையை வழக்கம் போல் திறக்க வந்துள்ளார். அப்போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்த போது மதுப்பாட்டில்கள் கலைந்து கிடைந்துள்ளது.
பின்னர் அவர் சோதனை செய்த போது சுமார் ரூ.10 ஆயிரத்து 400 மதிப்புள்ள 62 மதுபாட்டில்கள் திருடு போய் உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.