• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக் கடையை காலை 7 மணிக்கு கடை திறக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை – அமைச்சர் முத்துசாமி

July 17, 2023 தண்டோரா குழு

கோவை ஒண்டிபுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

மாணவ,மாணவிகள் சைக்கிள் “பெல்” அடித்து அமைச்சர் முத்துச்சாமிக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வரின் முன்னெடுப்பு காரணமாக பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தபட்டு வருகின்றது. நம்முடைய கோவை மாவட்டத்தில் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றது. கோவையில்
260.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் , 3432 இடங்களில் சாலை பணிகள் செய்யப்பட இருக்கின்றது. 567 கி்மீ தூரம் சாலைகள் அமைக்கப்பட இருக்கின்றது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் சைக்கிள் 15270 மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சைக்கிள் கொடுக்கபட்டுள்ளது. மீதமுள்ள சைக்கிள்கள் குறித்த நேரத்திற்குள் வழங்கப்படும்.
மாணவர்களுக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா ? எவ்வளவு தூரத்தில் இருந்து வருகின்றார்கள் என்பதை கேட்டு, மாணவர்கள் சைக்கிள் ஓட்டி நன்றாக பழக ஏற்பாடுகளை செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து சைக்கிள் ஓட்ட வேண்டும் என மாணவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முதலில் அமலாக்க துறை ஒரு சோதனை நடத்தி இருக்கின்றது. அதனை தொடர்த்து இப்போது ஒரு சோதனை அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்டு இருக்கின்றது. ,இது திட்டமிட்டு செயல்படுத்தப் படுகின்றது.நிச்சயம் அமைச்சர் பொன்முடி இதில் இருந்து வெளியே வருவார். இப்படி அமலாக்க துறை மூலம் சோதனை நடத்துவதன் மூலமாக பயத்தை ஏற்படுத்தி, மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்கின்றனர். எங்களுடைய பணி வழக்கம் போல நடைபெறுகின்றது.

பெங்களுரில் நடைபெறும் கூட்டணி கட்சி கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கின்றார்.
கோவைக்கு பெரிய திட்டங்கள் அதிகாரிகள் வகுத்து வைத்திருக்கின்றனர். செம்மொழி பூங்கா செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய சிறை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதே போல பல திட்டங்கள் யோசிக்கபட்டுள்ளது.

டாஸ்மாக் விவகாரங்களில் எந்த முடிவிலும் பின்வாங்க வில்லை. டாஸ்மாக் தொடர்பான விவகாரங்களில் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து தொழிற்சங்கத்தினருடன் பேசி இருக்கின்றோம் . கரன்ட் பில், சரக்கு இறக்குவது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் தொழிற்சங்கத்தினருடன் பேசி இருக்கின்றோம். ஒரு வார காலத்திற்குள் தொழிற்சங்கத்தினரை அழைத்து பேசி, கொடுத்துள்ள மனுக்கள் குறித்து பேசி தொழிற்சங்கத்தினருடன் ஓப்பந்தம் கூட போட திட்டமிட்டு இருக்கின்றது. முதலில் டாஸ்மாக்கில் நடைமுறையில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.

டாஸ்மாக்கில் கூடுதலாக பணம் வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் டெட்ரா பேக் மூலம் மதுவிற்பனை செய்யும் திட்டம் பரிசீலனையில் தான் இருக்கின்றது. இதை முழுமையாக ஆய்வு செய்து அனைத்து துறை அதகாரிகளிடம் கலந்து ஆலோசித்துதான் டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும். இதே போல 90 மி.லி மதுபானம் கொண்டு வருவதும் ஆய்வில் தான் இருக்கின்றது.

காலையில் குடிப்பவர்களை குடிகாரன் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது, காலையில் கடுமையான வேலை செய்யும் தூய்மைபணியாளர்கள் காலையில் குடிக்கின்றனர், இதை ஏன் தவறாக பேச வேண்டும், இதற்கு மாற்று ஏற்பாடு என்ன என்பதைதான் ஆராய்ந்து வருகின்றோம். காலை 7 மணிக்கு கடை திறக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.புதியதாக குடிக்க வருபவர்களை கணக்கு எடுத்து , அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதே போல வயதானவர்கள், உடலுக்கு மோசமான நிலையில் இருப்பவர்கள் குடிப்பதை தடுக்கவும் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் ஒழுங்கான சீர்திருத்ததினை யாரையும் பாதிக்காத வகையில் செய்வோம். ஆலோசனைகளை கேவலப்படுத்தாமல், அன்பாக சொல்லுங்கள். வேலை நிறுத்த போராட்டத்தில் உள்ள சிறு நூற்பாலைகள் உரிமையாளர்களிடம் அரசு தரப்பில் பேசி இருக்கின்றோம் , அது தொடர்பான முடிவுகள் விரைவில் சொல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க