July 18, 2023 தண்டோரா குழு
நிலையான ஆற்றல் நடைமுறைகளை மையமாக வைத்து நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் கோவைj கிருஷ்ணம்மாள் கல்லூரி மற்றும்k நிலைத்தன்மை ஆற்றல் பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு (SEPA)இணைந்து தேசிய அளவிலான கருத்தரங்கம் கோவையில் வரும் 24 ஆம் தேதி துவங்க உள்ளது.
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மற்றும் நிலைத்தன்மை ஆற்றல் பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு (SEPA) உடன் இணைந்து நிலையான இந்தியா 2023 என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கிருஷ்ணம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில், கல்லூரியின் சேர்பேர் சன்
நந்தினி ரங்கசாமி, செயலாளர் யசோதா தேவி,செபாவின் தலைவர் ரகுராமன் அர்ஜூனன், மற்றும் அசோக்குமார்,கிஷோர் பூவராகவ்,அனில் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில்,நிலையான ஆற்றல் நடைமுறைகளை மையமாக வைத்து நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை முன்னனி தொழில் நுட்பவியாளர்கள் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
தொடர்ச்சியான கருத்தரங்கங்கள் உள்ளடக்கிய தேசிய நிகழ்சிகளை செபா நடத்தி வருவதாகவும், கோவையில் நடைபெறுவதை தொடர்ந்து அடுத்ததாக ஹைதராபாத்,புனே, நொய்டாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கருத்தரங்கில் நடைபெற உள்ள பயிலரங்கங்கள். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் களம், குறிப்பாக சூரிய ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன். பொருட்கள், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கொள்கை கட்டமைப்பு. திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் உள்ள முன்னேற்றங்களை உள்ளடக்கிய விரைவான சிக்கல்களில் இருந்து தொழில் நுட்ப விளக்கங்கள் மற்றும் குழு விவாதங்கள் ஆகியவை இடம்பெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இந்தப் பயிலரங்குகளுடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக பொதுவாக நிலைத்தன்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சூரிய ஆற்றல் ஆகியவற்றில் மாணவர்களின் திறன் சார்ந்த போட்டியும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ,இதில் சிறந்த நுட்பங்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.