• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறு, நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டம் உரிமையாளர்கள் இன்று அமைச்சர்களுடன் சந்திப்பு

July 21, 2023 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் நூற்பாலை தொழில் பல மாதங்களாக வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்து வருகிறது கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் முதல் முறையாக நூல் மட்டும் துணி வகைகளின் ஏற்றுமதி சுமார் 28 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. தற்போதைய பஞ்சு விலை கண்டி ஒன்றுக்கு 356 கிலோ விதம் ரூபாய் 58 ஆயிரமாக உள்ளது. 40ம் நம்பர் நூல் விலை ஒரு கிலோவிற்கு ரூபாய் 235 ஆக உள்ளது. சுத்தமான பருத்தி ஒரு கிலோவிற்கு ரூ.194ஆக உள்ளது.

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தின் வழிகாட்டுதலின்படி குறைந்தபட்சம் பஞ்சில் இருந்து நூல் மாற்றத்திற்கான விலை ஒரு கிலோவிற்கு ரூ.2ஆக இருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பஞ்சிலிருந்து நூல் மாற்றத்திற்கான விலை ரூபாய் ஒன்று மட்டும்தான் கிடைக்கிறது. இதனால் கிலோவிற்கு ரூபாய் 40 வரை நஷ்டம் ஏற்படுகிறது. சுமார் 10 ஆயிரம் கதிர்கள் கொண்ட ஆலை ஒன்றில் 2,500 கிலோ நூல் தயாரிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக வங்கி கடன் திருப்பி செலுத்துதல், பஞ்சு கொள்முதல் பணம் செலுத்துதல், மின்சார கட்டணம், ஜிஎஸ்டி, இஎஸ்ஐ, பிஎப் போன்றவை செலவினங்களை செலுத்த முடியாமல் ஆலைகள் தத்தளித்து வருகிறது. இந்நிலை நீடித்தால் நூற்பாலைகள் விரைவில் நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளப்படும். நூற்பாலைகளை காப்பாற்ற ஒன்றிய அரசு பஞ்சின் மீது விதிக்கப்பட்ட 11 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வங்கிகளின் கடன் வட்டி விகிதங்களை உடனடியாக பழைய நிலைக்கு 7.5 சதவீதம் அளவிற்கு குறைத்து கொடுக்க வேண்டும்.

ஜவுளி நூற்புத் தொழிலுக்கு ஒரே நாடு ஒரே கொள்கையை ஒன்றிய அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். நூல் மட்டும் துணி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஊக்குவிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்நிய நூல் மற்றும் துணி வகைகள் கட்டுப்பாடு இன்றி இறக்குமதி ஆவது கண்காணித்து தடுக்க மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2022 ம் ஆண்டு உயர்த்திய மின்சார கட்டணத்தை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இதுபோன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் கடந்த 15ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி நிறுத்தம். இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.85 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 6வது நாளாக நடந்த இந்த உற்பத்தி நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 21 ஆயிரம் டன் நூல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தென்னிந்திய நூற்பாலைகளின் கூட்டமைப்பு (சிஸ்பா) மேலாளர் பிரபு கூறுகையில்,

‘‘உற்பத்தி நிறுத்தம் போராட்டம் தொடர்பாக சென்னையில் இன்று மின்சாரத்துறை மற்றும் கைத்தறித்துறை அமைச்சர்களை சந்திக்கிறோம். இந்த சந்திப்பின் மூலம் சுமூகமான முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்’’ என்றார்.

மேலும் படிக்க