சுவாமி : சாய் பாபா.
தலச்சிறப்பு :
இக்கோவிலில் துனி என்கிற அணையாத புனித நெருப்பு உள்ள இடம் நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. மற்ற பாபா கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால் நீங்களே சன்னதியில் பாபாவின் வெண்பளிங்குச் சிலையை தொட்டு வணங்கலாம். மாலை, சால்வைகள் சார்த்தலாம். அவர் பாதங்களை தொட்டு கீழே விழுந்து வணங்கலாம். கோவிலில் நுழைந்து அவர் சன்னதி முன் நிற்கும் போது ஒரு தெய்வீக அலையை, உணர்வை நிச்சயம் அனுபவிக்கலாம்.
பாபாவின் சன்னதி, துவாரகாமாயி அனா, குருஸ்தான் மற்றும் பின்புறம் உள்ள நரசிம்ம ஸ்வாமிஜியின் சமாதியை உள்ளடக்கிய ஹால் ஆகியவை கண்ணிற்கும், கருத்திற்கும் விருந்தாக புதுப்பொலிவுடன் திகழ்கிறது. நரசிம்ம ஸ்வாமிஜியின் சமாதியின் மேல் உள்ள வெண் பளிங்குச்சிலை அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன பாபாவின் உற்சவ மூர்த்தி ஆகியவை மனதில் பக்தி பரவச மூட்டும் வகையில் அமைந்துள்ளது.
தல வரலாறு :
இக்கோவில் சீரடி சாய்பாபா மீது கொண்ட பக்தியினால் ஸ்ரீநரசிம்ம சுவாமிஜி அவர்களால் 1941 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சீரடி சாயிபாபாவை பற்றி பல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த இவர் பாபா பற்றியும், அவரது உபதேசங்களையும் கட்டுரையாக எழுதி உள்ளார். இவரது அரிய முயற்சியால் உருவான ஆலயம் இன்று அதி நவீன வளர்ச்சி அடைந்துள்ளது.
நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் முகவரி : அருள்மிகு சாய் பாபா திருக்கோவில்.
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது