• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம்களில் ஆட்சியர் ஆய்வு – ஒரே நாளில் 54 ஆயிரம் விண்ணப்பங்கள்

July 25, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கெம்பட்டி காலனி, ஒக்கிலியர் வீதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் செட்டிக்காபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், எம்மே கவுண்டன்பாளையம் கிராம சேவை மையம் ஆகிய இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் பெறும் முகாம் நடைபெற்று வருவதை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. தற்போது முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் கடந்த 24ம் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 212 ரேஷன் கடைகளிலும், அனைத்து வருவாய் வட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளில் 584 ரேஷன் கடைகளிலும், வால்பாறை நகராட்சிப் பகுதியில் உள்ள 43 கடைகளிலும் நடைபெற்று வருகின்றது.

இம்முகாம்கள் அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடைபெறும்.மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் பெறும் முதற்கட்ட முகாமில் 1679 தன்னார்வலர்கள் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.மேலும் இம்முகாமில் 839 முகாம் பொறுப்பு அலுவலர்கள், 94 கண்காணிப்பு அலுவலர்கள், 281 மண்டல அலுவலர்கள், 11 வட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள்நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

முதல் இரண்டு நாட்களில் ஒவ்வொரு முகாமிலும்,ஒரு நாளைக்கு 60 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றது. நேற்று சுமார் 54 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒரு விண்ணப்பம் பதிவு செய்ய 3-5 நிமிடங்கள் ஆகலாம்.மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று விண்ணப்பப் பதிவு முகாமிற்கு விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து, உரிய ஆவணங்களைச் சரிபார்ப்புக்கு எடுத்துவர வேண்டும்.

மேலும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய தெரியாதவர்களுக்காக முகாம்களிலே விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு தேவையான உதவிகளை வழங்க உதவி மைய தன்னார்வலர்கள் உள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மண்டலக்குழுத் தலைவர் மீனாலோகு, மாநகர சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வம், மாநகராட்சி உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க