• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல்

July 26, 2023 தண்டோரா குழு

தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் மாமன்றக் கூட்டத்தில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல் தொடர்பாக கடந்த 14ம் தேதியன்றே100 வார்டு கவுன்சிலர்களுக்கும் அறிவிப்பு வழங்கி ஒப்புகை பெறப்பட்டுள்ளது.மேலும் தேர்தல் நடைபெறுவதற்குரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கவுன்சிலர்கள் அனைவரும் இன்று காலை 9.30 மணிக்குள் தவறாது மாமன்ற கூட்டத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் பதவிக்கு ஒன்பது உறுப்பினர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நேர்வில், அந்த உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும். போட்டியிருப்பின்,மறைமுகத்தேர்தல் மூலம் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதைத்தொடர்ந்து தேர்தல் செயல்முறைகள் மற்றும் முடிவுகள் பற்றிய அறிக்கை, தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கும், மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், கமிஷனருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க