July 29, 2023
தண்டோரா குழு
சி.எஸ்.ஐ கோவை திருமண்டலத்தின் 35 – ஆவது கூடுகை, நீலகிரி மாவட்டம் கேத்தியிலுள்ள சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் 2023 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 – ஆம் தேதி முதல் 25 – ஆம் தேதி முடிய நடைபெற்றது.
இந்தக் கூடுகையை பேராயர் தலைவர் பேரருட் திமோத்தி ரவீந்தர் தொடங்கி வைத்தார்.இந்தக் கூடுகையில் தியானம் , ஜெபம்,பாடல்கள்,பேராயர் மற்றும் திருமண்டல அலுவலர்கள் ஆகியோரின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
2022-2025 மூன்றாண்டுகளுக்கான பேராயத்தின் அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதன்படி
அருள்திரு L. டேவிட் பர்னபாஸ் உப தலைவராகவும்,அருள்திரு S. பிரின்ஸ் கால்வின் கெளரவ செயலாளராகவும், D.S. அமிர்தம் கௌரவப் பொருளாளராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிகழ்வுகளைத் தொடர்ந்து மூன்று அலுவலர்களும் 25.07.2023 அன்று நடைபெற்ற ஆராதனைக் கூட்டத்தில் பேராயரால் Install செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 28.07.2023 அன்று கோவை பந்தய சாலையிலுள்ள திருமண்டல அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.