• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜுலை 29 இன்று சர்வதேச புலிகள் தினம்

July 29, 2023 மு, சிராஜ்தீன் (WNCT)

கடந்த 2010-ம் ஆண்டு ரஷியாவில் 13 நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாநாடு நடந்தது. இதில், புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புலிகள் இனத்தை பாதுகாக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாட தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தியது, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள்லிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி புலிகளின் முக்கியத்துவத்தின் புரிதலை ஏற்படுத்தவே, ஒரு புலி சுமார் 25சதுர கி.மீட்டர் பரப்பளவில் உள்ள காட்டை தன் எல்லையாகக் கொண்டு வசிக்கும்.

தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் வனநிலப்பரப்பை அவைகள் பகிர்ந்து கொள்ள வேண்டிய வாழ்விட சிக்கல் அதிகரித்திருக்கும்.யானை, புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் கடந்த நூற்றாண்டுவரை மக்களைவிட்டு தள்ளி காடுகளுக்குள்தான் வாழ்ந்துவந்தது. ஏன் இப்போது மக்கள் வசிப்பிடங்களுக்கு வருகிறதென்றால், நம்மிடையே உள்ள சில சமூகவிரோதிகள் சுயநலத்திற்காக, பசுமைக்காட்டை மொட்டையடித்தனர்.

காடுகளை அழிக்கும்போது விலங்களுக்கும் வசிப்பிடம் பிரச்சனையாக ஆதங்கமும், ஆத்திரமும் ஏற்படுகிறது. விலங்குகள் நடமாடும் வலசைகளும் மாறுகின்றன. இதனால் காட்டில் வசிக்கும் விலங்குகள் மக்கள் வசிப்பிடத்திற்குள் வருகிறது. வரும் வன விலங்குகள் சில வன விரோதிகள் உணவுக்காக வரும் வன விலங்குகளுக்கு விஷம் வைப்பதும் , அதை அடித்து துடி துடித்து மரணத்தை ஏர்ப்படித்தவும் செய்கின்றனர். அதுவும் தண்ணீருக்காவும் உணவுக்காகவும் வனப் பகுதியில் சாலையை கடக்கும் வன உயிரினங்கள் சாலை விபத்தில் இறக்க நேரிடுகிறது.

இயற்கையின் அருட்கொடையான காடும் மலையும் நீர்சுனைகளும், விலங்குகளும் ஆகிய உணவுச்சங்கிலி ஒன்றோடு ஒன்று இணைந்தவையாகும். இவற்றுள் ஒன்றைச் சேதப்படுத்தினால் அதனுடைய தன்மையும், வாழ்வுமுறையையும் மீறவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றது. நாம் வாழ நீரும், சுத்தமான காற்றும் வேண்டும். இந்த இரண்டும் கிடைக்க வனம் வேண்டும். வனம் பெருக புலிகள் வேண்டும்.

மழை, வெயில் காலத்தில் நாம் எப்படி ஒரு குடையின் கீழ் பாதுகாப்பாக இருக்கிறோமோ அதுபோல் புலிகளை காப்பாற்றினால் அதற்கு கீழ் உள்ள அனைத்து வன விலங்குகளையும் காப்பாற்றுவதாக அமையும் என்பது வனத்துறையினரின் தாரக மந்திரமாகும். எனவே புலிகளை காப்பது வனத்துறையின் கடமை மட்டுமன்று, நாம் ஒவ்வொருவரின் பங்கும் அதில் இருக்க வேண்டும். நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும் என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் புலிகள் தினத்தை கொண்டாடுவோம். புலிகளை காப்போம்…!

நமது வனங்களும் வனஉயிரினங்களும் மதிப்பு மிக்கவை. அவற்றை அறியாது பாதுகாப்போம்…!

மேலும் படிக்க