August 2, 2023 தண்டோரா குழு
ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று காலை 10
NSS, பன்னாட்டு வணிகத்துறை இணைந்து சாந்தி சோஷியல் சர்வீசஸுடன் யூனிட்டி லீட்ஸ் (unity leads) தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் கல்லூரி மாணவ,மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்.125 பேர் குருதிக்கொடை வழங்கினார்கள். யோகாவில் பல்வேறு சாதனைகள் படைத்தவரும் இரத்த தானத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும், யூனிட்டி லீட்ஸ் தலைவருமான ரிஷி யோகா மாஸ்டர் சதீஷ்குமார் 34வது முறையாக இரத்த தானம் செய்தார்.
மாணவ மாணவியருக்கு யோகா பயிற்சியும் விழிப்புணர்வு வழங்கியதுடன் இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கமளித்தார்.6 மாதங்களுக்கு ஒரு முறை இரத்த தானம் செய்து முகம் தெரியாத பல உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும் என்று வலியுறுத்தினார். கல்லூரி முதல்வர் துணைத்தலைவர் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நாம் எப்போதும் நாம் நன்றாக இருந்தால் நம் நாடும் மேலும் வலிமை பெறும் என்றும் கூறினார்.