August 3, 2023 தண்டோரா குழு
கோவையில் 5 கோடி மதிப்பிலான தங்க நகையை மோசடி செய்த தம்பதி மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் ஒரு தனியார் தங்க நிறுவனம் 6 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மொத்தமாக சொக்க தங்கத்தை வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்து அவற்றை தங்க நகை பட்டறை வைத்திருப்பவர்களிடம் கொடுத்து வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப தங்க ஆபரணங்களாக வடிவமைத்து அதற்குண்டான செய்கூலியை பட்டறை உரிமையாளருக்கு கொடுத்து மேற்படி தங்க ஆபரண நகைகளை விற்பனை செய்வது நகை கடைகளுக்கு சப்ளை செய்துவந்தது.
இதற்கிடையில்,கோவை தெலுங்குபாளையத்தில் குடியிருந்து கொண்டு தனது மனைவி நித்யா சம்பத்குமார் அவர்களுக்கு உரிமையான கோவை செல்வபுரத்தில் உள்ள SNG jewellers என்ற நகை பட்டறையை நடத்தி வரும் விஜய் வெங்கடேஷ் என்பவர் இதே தொழில் செய்து வருகிறார்.இதையடுத்து, SNG jewellers தங்க நகை பட்டறையில் மொத்தமாக சொக்க தங்கத்தை கொடுத்து JOB WORK மூலம் தங்க நகை ஆபரணங்களாக பெற்று கொண்டு அதற்குண்டான செய்கூலியை வங்கி பரிவர்த்தனை மூலமாக இந்நிறுவனம் செய்து வந்தது.
அதுவும் கடந்த 5 வருடங்களாக நிறைய ஆர்டர்கள் கொடுத்துள்ளது.ஏறக்குறைய 40 ற்கும் மேற்பட்ட நபர்களை வைத்து இயங்கி வரும் SNG Jewellers கொடுக்கும் ஆர்டர்களை கடந்த 5 வருடத்திற்கு மேலாக சொன்ன நேரத்தில் செய்து கொடுத்து நம்பிக்கையை பெற்ற காரணத்தினால் இந்நிறுவனம் ஆடர் கொடுத்துள்ளது.
அவ்வாறு இந்த நிறுவத்திற்கு ஆர்டர்களை கொடுக்கும்போது SNG Jewellers நிறுவனத்திற்காக ஏற்படுத்தப்பட்ட SMITH ISSUE VOUCHER மூலம் மேற்படி நிறுவனத்தை சேர்ந்த விஜய் வெங்கடேஷ் என்பவரிடமோ,உரிமையாளரான அவரது மனைவி நித்யா சம்பத் குமாரிடமோ , தங்க ஆபரணங்கள் செய்வதற்கான ஆர்டர் சொல்லி சொக்க தங்கத்தை கொடுத்து வந்துள்ளது.
இந்நிலையில்,8988,530 கிராம் எடை கொண்ட ரூபாய் 5,16,84,067 / –
மதிப்பிலானா நகையை SNG Jewellers நிறுவனம் பாக்கி வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்நிறுவனம் கேட்டபோது தங்கத்தை ஒருவார காலத்திற்குள் அவருடைய பெயரில் உள்ள சொத்துக்களை விற்று கொடுத்து விடுவதாக கூறி விஜய்வெங்கடேஷ் பெயரிலுள்ள சில சொத்து பத்தரங்களின் ஜெராக்ஸ் காப்பிகளை கொடுத்துள்ளார்.அதன் பின்னர் நித்யாசம்பத்குமார் மற்றும் அவரது கணவர் விஜய்வெங்கடேஷ் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
மேலும் விஜய்வெங்கடேஷ் என்னிடம் கொடுத்த சொத்து பத்திரங்களை கொடுத்து விசாரித்தபோது அவை அனைத்தும் கடனில் இருப்பது தெரியவந்தது.மேலும் , தரவேண்டிய தங்கத்தை தராமல் ஏமாற்றி மோசடி செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தில் இருப்பதும் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து,தங்கத்தை திருப்பி தரமால் ஏமாற்றி மோசடி செய்த S.N.G. Jewellers உரிமையாளரான நித்யா சம்பத்குமார் மற்றும் அவரது கணவர் விஜய்வெங்கடேஷ் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்நிறுவனம் சார்பில் ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து,இந்த மோசடி தொடர்பாக
S.N.G. Jewellers உரிமையாளரான நித்யா சம்பத்குமார் மற்றும் அவரது கணவர் விஜய்வெங்கடேஷ் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.