• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாதிரி வாக்குப்பதிவு : ஆட்சியர் ஆய்வு

August 8, 2023 தண்டோரா குழு

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தேர்தல் இருப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தெற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தேர்தல் இருப்புக் கிடங்கில் 7578 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4806 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 4719 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் என மொத்தம் 17106 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவன பொறியாளர்களால் முதல்நிலை சரிபார்ப்பு பணியின்போது சரிபார்க்கப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு மொத்தமாக 5 சதவீதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்றைய தினம் 4806 கட்டுப்பாட்டு அலகில் 1200 வாக்குகள் 48 இயந்திரங்களிலும், மற்றும் 1000 வாக்குகள் 96 இயந்திரங்களிலும், நாளைய தினம் 500 வாக்குகள் 96 இயந்திரங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இன்று நடைபெற்ற இம்மாதிரி வாக்குப்பதிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க