• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மைண்ட்டாக்ஸ் டெக்னோ இன்டியா பிரைவேட் லிமிடெட் விரிவாக்கம் கோவையில் இரண்டாவது கிளை துவக்கம்

August 11, 2023 தண்டோரா குழு

மைண்ட்டாக்ஸ் டெக்னோ பிரைவேட் லிமிடெட், இந்தியாவில் தனது விரிவாக்க நடவடிக்கையாக இரண்டாவது கிளையை கோயம்புத்தூரில் துவங்கியுள்ளது.

இந்த புதிய யுக்தி சார்ந்த விரிவாக்கமானது கண்டுபிடிப்புகள்,வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சேவை,தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் செமி கண்டக்டர் தொழிற்சாலையில் இந்திய அரசுடன் இணைந்து பங்குதாராக செயலாற்றவும் இப்பகுதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செமிகன்டக்டர் உற்பத்தியில்,ஒரு தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது மைண்ட்டாக்ஸ். பொறியியல் துறையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் நவீனத்தையும் புகுத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை மேற்கொண்டு வருகிறது. அடுத்த தலைமுறைக்கான செமிகன்டக்டர்களை உருவாக்கும் முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் சுய சார்பு தேவைக்காகவும், இந்தியாவிலேயே உருவாக்குவோம் என்ற திட்டத்தினையும் கருத்தில் கொண்டு தொலைநோக்கோடு இந்த நிறுவனம் செயல்படும். கோவையில் இதன் விரிவாக்கம் இந்திய சந்தையில் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வைக்கும். செமி கன்டக்டர் தொழிலில் அதிநவீன வசதியோடு உருவாகியுள்ள கோவை நிறுவனத்தில், பல்வேறு ஆராய்ச்சி மேம்பாடுகளை மேற்கொள்ளவிருக்கிறது.

உற்பத்தியையும் மேற்கொள்ளவிருக்கிறது.
கோவையில் உள்ள திறமையான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதோடு, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட பணிகளையும் வழங்கும். கோவையின் பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும். மைண்ட்டாக்ஸ் தொழில்நுட்பம், பங்குதாராக இணைந்து செயலாற்றுவதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. குறிப்பாக கோவை பகுதியில் உள்ள பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளுடன் பங்குதாராக மாற திட்டமிட்டுள்ளது.

செமிகன்டக்டர் தொழில்நுட்பத்தில் அறிவுசார் பகிர்வு, புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி, இணைந்து செயலாற்றுதல் போன்றவைகளை மேற்கொள்ளும்.

மைண்ட்டாக்ஸ் டெக்னோ தலைமை செயல் அதிகாரி ஸ்ரீ திருநாவுக்கரசு கூ றுகையில்,

“கோவையில் இரண்டாவது கிளையை நாங்கள் இங்கு துவக்குவது ஒரு பரவசமான பயணமாக இருக்கும். இந்திய செமிகன்டக்டர் தொழிலில், சிறந்த பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஒளிமிகுந்த அறிவுசார்ந்தவர்களுடன் இணைந்து செயல்படுவதில் மிக்க ஆர்வம் கொண்டுள்ளோம்.

தொழில்நுட்ப மேம்பாடு, செமி கன்டக்டர் தொழில்நுட்பத்தை விரைவுபடுத்தி சர்வதேச அளவிற்கு கருவிகளை அளிக்கவும் நோக்கமாக கொண்டுள்ளோம். கோவையில் எங்களது இரண்டாவது கிளையை துவக்குவதில் மிகுந்த பரவசமடைந்துள்ளோம். இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், உள்நாட்டு வணிகம், வேலைவாய்ப்பு, புதிய கண்டுபிடிப்புகள் என பல்வேறு வகையில் ஆதரவளிப்போம். இந்திய அரசுடனும் உள்ளுர் சமுதாயத்துடனும் வலுவான பங்குதாராக இருப்போம்,” என்றார்.

கோவையில் புதிய கிளையானது, பீளமேடு தண்ணீர்பந்தல் கொடிசியா ரோடு முதல் வீதியில், ஐஸ்வர்யம் அபார்ட்மென்ட் அருகில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க