• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ‘ ஹெலோபோட்ஸ்’23 ‘ கண்காட்சி – ஆகஸ்ட் 15 முதல் 31 – ந்தேதி வரை நடக்கிறது

August 15, 2023 தண்டோரா குழு

தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இந்த வேளையில் தொழில்நுட்பங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக கோவையில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , இன்கர் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹெலோபோட்ஸ்’23 ‘ என்னும் தொழில்நுட்ப கண்காட்சியை ஆகஸ்ட் 15 முதல் 31 – ந்தேதி வரை நடத்துகிறது. இக்கண்காட்சியை கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் துவக்கி வைத்தார்.

ரோபாட்டிக்ஸ் கல்வியில் முன்னோடியாக திகழும் இன்கர் ரோபாட்டிக்ஸ் , சமீபத்தில் கேரள மாநிலம் திருச்சூரில் ரோபோட்டிக்ஸ் கண்காட்சியை நடத்தியது.இதை 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்து பார்வையிட்டனர்.அதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கோவையில் இந்த கண்காட்சியை இந்நிறுவனம் நடத்துகிறது .

இந்தக் கண்காட்சியில் , இந்நிறுவனம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கேஜெட்களை வெளியிட உள்ளது , இதில் சென்சார்கள் பொருத்தப்பட்ட 50 – அடி இன்டராக்டிவ் சுவர். தொழில்நுட்பத்தின் ஆரம்பம் முதல் இன்றைய காலம் வரையிலான பல்வேறு விஷயங்கள் இதில் இடம் பெற உள்ளன.

இந்தக் கண்காட்சியில் தொழில்துறை மற்றும் மனித உருவ ரோபோக்கள் . செயற்கை நுண்ணறிவு , ஆக்மென்டட் ரியாலிட்டி , விர்ச்சுவல் ரியாலிட்டி , 3 டி பிரிண்டர்கள் , ட்ரோன் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆகியவையும் இடம்பெறும் . வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் நோக்கத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக கோவையில் இந்த கண்காட்சியை இன்கர் நடத்துகிறது . இதில் பெற்றோர் , மாணவர்கள் , தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்துறையை சேர்ந்தவர்கள் என எராளமான பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த கண்காட்சியில் , இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளை , ட்ரோன் வேர்ல்ட் , என்டுடி மற்றும் மச்சென் போன்ற பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன . ஹெலோபோட்ஸ்’23 கண்காட்சியில் மனித உருவ ரோபோக்கள் முதல் போக்குவரத்துக்கான மேம்பட்ட ட்ரோன் டாக்சிகள் வரையிலான பல்வேறு சாதனங்கள் இடம்பெற உள்ளன . மேலும் இதில் இடம் பெறும் எதிர்கால தொழில்நுட்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து அவர்களை பிரமிக்க வைக்கும் . 10,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் , வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்ட தொழில்நுட்பங்களுடன் , பல்வேறு ரோபோக்களும் இடம்பெற உள்ளன.

இது குறித்து இன்கர் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராகுல் பி பாலச்சந்திரன் கூறுகையில் ,

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்வதே எங்கள் முக்கிய நோக்கமாக உள்ளது . மேலும் அந்த தொழில்நுட்பம் அனைவரும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் . அதை வலியுறுத்தும் வகையிலேயே இந்த கண்காட்சியை நாங்கள் இங்கு நடத்த இருக்கிறோம் . இது தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதை பிரதிபலிக்கிறது . கோயம்புத்தூரில் நடைபெறும் கண்காட்சியானது நாட்டினுடைய முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை முன்னிலைப்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார் ட்ரோன் வேர்ல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டபிள்யூஜி சிடிஆர் சதீஷ் குமார் கூறுகையில் , எதிர்கால தொழில்நுட்பங்களில் எங்களின் நிபுணத்துவத்தை தொழில்துறை நகரமான கோவைக்கு அறிமுகப்படுத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

ரோபாட்டிக்சின் ஆக்கப்பூர்வமான திறனை வெளிக்கொணரவும் , இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் ரோபோ குறித்த கல்வியறிவை மேம்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம் . கோயம்புத்தூர் போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் இதுபோன்ற கண்காட்சியை இன்கர் நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும் என்று தெரிவித்தார்.

இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளையின் தலைவர் டி.ஆர்.கே சரசுவதி கூறுகையில் ,

எங்கள் இளம் திறமையாளர்களுக்கு எதிர்கால தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த இன்கர் ரோபாட்டிக்ஸ் நிபுணர்களுடன் இணைந்திருப்பது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் . இது நமது மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடனும் தைரியத்துடனும் எதிர்கால தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வழி வகுக்கிறது என்றார்.

மேலும் படிக்க