August 15, 2023
தண்டோரா குழு
நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவை வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.பின்னர் கோவை மாநகர,மாவட்ட போலீசார் 109 பேர்,அரசு அலுவலர்கள் 153 பேர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் 15 பேர், மொழி போராட்ட தியாகிகள் 4 பேர் என மொத்தம் 281 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி,கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,கோவை சரக டிஐ ஜி சரவண சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஷ் சண்முகம் மதிவாணன் சுகாஷினி,மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள்,பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.