• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லிபாஸ் தையல் பயிற்சிமையத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா

August 17, 2023 தண்டோரா குழு

இஸ்லாமிய அறக்கட்டளையின் (IET) கீழ் செயல்பட்டு வரும் லிபாஸ் தையல் பயிற்சிமையத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.

JIH கோவைப் பெருநகரத்தலைவர் பி எஸ் உமர் பாரூக் தலைமை உரையாற்றினார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பல்வேறுமக்கள் சேவைப் பணிகளைப் பற்றி தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய JIH மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர்மௌலவி இஸ்மாயில் சிறப்புரையாற்றினார்.

இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின்துணை முதல்வர் ஆசிரியர் சலீம் வாழ்த்துரை வழங்கினார்.TIE Women என்பதனுடைய முன்னாள் தலைவியாகவும் Ampere vehicles என்கிற நிறுவனத்தின் CEO வாகஇருந்தவரும் பெண்கள் மேம்பாட்டிற்காக அவர்களின் முன்னேற்றத்திற்காகத் தொழில் துவங்குவதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற, அதற்கான முதலீடுகளையும் அவர்களுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கிக் கொண்டு பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு கொண்டு இருக்கின்ற ஹேமலதா அண்ணாமலை வாழ்த்துரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து propel industries private limitedன் இயக்குனராகவும் பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கின்ற CSR நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும், “ஒன்றாக வளர்ச்சி ” என்கிற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கல்வியில் தேவை உடையவர்களுக்கு அவர்களுக்கான பொருளாதார வழிகாட்டுதல்கள் உதவிகள் வழங்கி கல்வியிலே சிறந்து விளங்க கூடிய ஒரு தொழில் முனைவரான வித்யா செந்தில் குமார் வாழ்த்துரை வழங்கினார்.

சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சேகர் (மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கோவை.)வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்.அரசு முஸ்லிம் மகளிர் சுய உதவிக் குழுவின் செயலாளர் சாஹூல் ஹமீது கலந்து கொண்டார் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை முறையே இஸ்லாமியக் கல்வி அறக்கட்டளைச் செயலாளர் ஷப்பீர் அஹமது அவர்களும்,இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் டாக்டர் அப்துல் ஹக்கீம் அவர்களும்,இஸ்லாமிய அறக்கட்டளையின் யூசுஃப் அவர்களும் வழங்கினார்கள்.

சிறப்பு விருந்தினர்கள் தையல் பயிற்சி முடித்த 200 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்வில் கோவை மகளிர் அணி தலைவர் ஜஹினா அஹமத்,முன்னிலை வகித்தார்.

இறுதியில் (JIH) ஜமாஅத் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம் நன்றியுரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியை கிழக்கு மண்டலச் செயலாளர்ஷகிலா தொகுத்து வழங்கினார்.இதில் நான்கு இடங்களில் நடைபெற்று வரும் தையல் பயிற்சி மையங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க