• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவிலேயே முதன் முறையாக, கோவையில் விஷங்களை பற்றி படிப்பதற்காக ஒரு பட்டய படிப்பு !

August 18, 2023 தண்டோரா குழு

பாம்புகள் மற்றும் பாம்புகடிகளின் விஷம் குறித்தும் அதன் சிகிச்சை முறைகள் குறித்தும் கற்று கொள்ளும் வகையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் புதிய பட்டய படிப்பு இன்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது

இந்தியாவிலேயே முதன் முறையாக, விஷங்களை பற்றி படிப்பதற்காக ஒரு பட்டய படிப்பு கோவை,பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் இன்று துவங்கபட்டது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அப்பொழுது பேசிய லண்டன் ரேடிங் பல்கலைக்கழக பேராசிரியர் சக்திவேல் வையாபுரி கூறியதாவது,

இங்கிலாந்தில் உள்ள ரேடிங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் விஷங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் பட்டய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த படிப்பில், விஷம் பற்றியும், அவைகளின் தன்மை பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியும் மாணவர்கள் விரிவாக படிப்பார்கள்,மேலும் பாம்புகளின் விஷம், முதுகெலும்பு இல்லாத ஊர்வனவைகளான பூரான், சிலந்தி, தேள்களின் விஷம் குறித்து விரிவாக படிப்பார்கள், மேலும் தாவரங்களில் உள்ள,விஷங்கள், அவற்றின் விளைவுகள் பற்றியும் படிப்பார்கள், முப்கியமாக விஷக்கடிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பார்கள்,என்பது பற்றியும் மற்றும்,உயிரை கொள்ள கூடிய விஷத்தை மருந்துகளாக பயண்படுத்துவது,குறித்தும் விரிவாக படிப்பார்கள்,இந்த படிப்பானது, 10 வாரங்களுக்குள் முடித்து விடும்.

அவ்வாறு முடித்த மாணவ மாணவிகளுக்கு, இதற்காக சான்றிதல்கள் வழங்கபடும், அதனை வைத்து மாணவர்கள், விஷங்களை பற்றிய ஆராய்ச்சியிலும், பெரியமருந்து கம்பெனிகளிலும் சேர்வதள்கான, வாய்ப்புகள் அதிகம் உள்ளது, இந்த படிப்பில் சேர 12 வது முடித்து இருந்தால் பொதுமானது, இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் மட்டுமின்றி, கோவையை சார்ந்த பொதுமக்கள், வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளும் சேர்ந்து கற்று பயணடையலாம், வாரத்தில் எதாவது ஒரு நாள், 2மணி நேரம் மட்டும் பயிற்சியளிக்க படும், இதற்காக சிறப்பு பயிற்சி மையம் இங்கு அமைக்கபட்டுள்ளது.
இதனை கோவையை சார்த்த அனைவரும் படிக்கலாம், என்று கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி, செயலாளர் யசோதா தேவி, முதல்வர் மீனா, தாவரவியல் துறை தலைவர் கிருஷ்ணவேணி, உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் நிர்மல் குமார், ஒருங்கிணைப்பாளர் சித்ரா தேவி, திட்ட ஒருங்கிணைப்பாளர் இராம் குமார் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க