August 24, 2023
தண்டோரா குழு
கோவை திமுக மகளிரணியினர் மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
மதுரை அதிமுக மாநாட்டில் தமிழக முதல்வர், அமைச்சர் உதயநிதி, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் ராசா குறித்து அவதூறாக பாடல் பாடியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்து கோவை திமுக மகளிரணியினர் மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி க்கள் கனிமொழி மற்றும் ராசா குறித்தும் அவதூறான பாடிய பாடல் விவகாரத்திற்கு கடும் கன்டணங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக மகளிரணி சார்பில் அருவறுக்கத்தக்க வகையில் பாடல் பாடியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளர், ஆணையரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மகளிரணி சார்பில் மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் பெண் தலைமை தாங்கிய அதிமுக கட்சியினர் பெண் எம்.பி குறித்து மிகவும் அருவறுக்கத்தக்க பாடலை பாடியுள்ளனர். அதனை முன்னாள் முதல்வர் பார்த்து ரசிப்பது மோசமான செயல் என தெரிவித்தனர்.