• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாயாரின் மோட்சதீப வழிபாட்டிலும் பிறரின் பசியாற்ற நினைத்த கோவை இளைஞர்

August 29, 2023 தண்டோரா குழு

தாயார் இறந்த 30 வது நாள் மோட்ச தீப நிகழ்வில் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களை அழைத்து வந்து புத்தாடைகள் மற்றும் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கிய கோவையை சேர்ந்த பாரதமாதா அறக்கட்டளை நிறுவனர் கவுரி சங்கர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

கோவையை சேர்ந்தவர் கௌரி சங்கர்.பாரத மாதா நற்பணி அறக்கட்டளை எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் இவர் ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சாலைகளில் வசிக்கும் முதியோர் மற்றும் இளையோருக்கு தொடர்ந்து உதவிகள் செய்வது,உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரது தாயார் மீனாட்சி கடந்த சில முன் தினங்களுக்கு மரணமடைந்த நிலையில்,அவரது முப்பாதவது நாள் மோட்ச தீப நிகழ்வை தனது இல்லத்தில் நடத்திய கௌரி சங்கர் அந்த நிகழ்விலும் தனது சமூக நலப்பார்வையை உறுதிபடுத்தி உள்ளார். அதன்படி தனது இல்லத்திற்கு ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கும் முதியோர்கள் மற்றும் இளையோர்களை தமது வீட்டிற்கு அழைத்து வந்த கௌரி சங்கர்,மோட்ச தீப நிகழ்வில் அவரது உறவினர்கள் முறைகளாக வழங்கிய பணம் மற்றும் ஆடைகளை தானமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து இல்லங்களுக்கு தேவையான அரசி மளிகை போன்ற பொருட்களையும் வழங்கினார்.இதில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆட்சி மன்ற குழு உறுப்பினரான சொல் வேந்தர் சுகி சிவம் மற்றும் அவரது துணைவியார் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனது தாயார் இறந்து முப்பாதாவது நாள் மோட்ச தீப வழிபாட்டையும் பிறருக்கு உதவும் நாளாக இவர் செய்த இந்த நிகழ்வு அனைவரின் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தொடர்ந்து சிவபுராணமான ஆதேஸ் மந்திர புத்தகத்தை நிகழ்வுக்கு வந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் ஜே.சி.டி. கல்லூரி முதல்வர் மனோகரன், கோவை மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சேரலாதன்,,ராமமூர்த்தி, நிர்வாகிகள் சண்முகம்,சமூக சேவகர் கார்த்திக்,வைபவ் டெக்காரேட்டர் பிரபு,தீபக் ஜான் போஸ்கோ,சவுரிபாளையம் கத்தோலிக்க தேவாங்க நலசங்கத்தின் நிர்வாகிகள் லியோ ராஜ்,பாபு எம் கென்னடி,சகாயாராஜ் மற்றும் பாரதமாதா அறக்கட்டளை நிர்வாகிகள் கார்த்திக் ராஜா ரமேஷ் சுஜன் பிரவீன் பிரகாஷ் இளங்கோ ராஜேஷ் சக்தி மாதவன் மெய்யரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க