• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்ற பொது விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி:

September 1, 2023 தண்டோரா குழு

யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் கோவை நவஇந்தியா அருகில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாரதியார் அரங்கில் இன்று தேசிய அளவிலான பொது விழிப்புணர்வு வினாடி&வினா போட்டி நடைபெற்றது.

`யூ-ஜீனியஸ் 2.0` என்ற தலைப்பில் நடந்த போட்டியில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியை யூனியன் பேங்க் ஆப் இந்தியா சென்னை மண்டல பொது மேலாளர் விஸ்வேஸ்வரன்,துணைப் பொதுமேலாளர் எஸ்.சுப்பிரமணியன்,கோவை பிராந்திய துணைப் பொது மேலாளர் தாசரி ஆஞ்சநேயுலு,திருப்பூர் பிராந்திய உதவிப் பொது மேலாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலையில், முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டி.ஆர்.கே.சரசுவதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்த போட்டியில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 600 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு பள்ளியில் இருந்து 2 பேர் வீதம் பங்கேற்றுள்ளனர். மாணவ, மாணவிகள் தங்கள் திறனை வெளிப்படுத்தி அசத்தினர்.

கோவையில் நடந்த வினாடி&வினா போட்டியில் சம்ஸ்ஹாரா அகாடமி மாணவர்கள் நிர்வான் ராமகிருஷ்ணன், ஹரீஸ் ஆகியோர் வெற்றிவாகை சூடினர். அவர்களுக்கு பரிசுக் கோப்பையை யூனியன் பேங்க் ஆப் இந்தியா சென்னை மண்டல பொது மேலாளர் விஸ்வேஸ்வரன் வழங்கினார். இதேபோன்ற வினாடிவினா போட்டிகள் அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், லக்னோ, சென்னை உள்ளிட்ட 32 நகரங்களில் நடத்தப்பட்டுள்ளன.

பொதுஅறிவு, இந்திய அறிவு, உலகப் பண்பாடு, விளையாட்டு, இலக்கியம், துறை மற்றும் ஆளுமை நபர்கள், பொது விழிப்புணர்வு, வங்கியியல், நிதி போன்ற தலைப்புகளைக் கொண்ட இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மும்பையில் நடைபெறும் இறுதிச்சுற்றுப் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

மேலும் படிக்க