September 5, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறு குறு தொழில் முனைவோர் 68 பேருக்கு, 37 கோடியே, 52 லட்சம், அரசின் உதவியுடன் வங்கி கடன் வசதி வழங்கப்பட்டது. இதை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் கூறியதாவது-
முதல்வர் அறிவிப்பு படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் பல நலத்திட்ட உதவிகள் தொழில் வளர்ச்சிக்கான பொதுமக்கள் உடைய பல கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம். தற்போது, தொழில் துறையில் மகளிர் ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அண்ணல் அம்பேத்கர் திட்டத்தில் மொத்தமாக 68 பேருக்கு 37 கோடியே 52 லட்ச ரூபாய் கடன்களை வழங்கி உள்ளோம்.
மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது கோவை மாவட்டத்தில் வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது. வங்கிகள் மூலம், தொழில் முனைவோர்களுக்கு மிகுந்த அக்கறையோடு வங்கி கடன் வசதி வழங்கப்பட்டு வருகிறது.மாநகராட்சி மேயர், துணை மேயர், ஒருங்கிணைந்து மாநகர முன்னேற்றத்திற்காக பணிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
இன்று வ உ சிதம்பரனார் சிலைக்கு 152 வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளோம்.
கலைஞர் அவர்கள் 1998 ல் வ உ சி எழுதிய புத்தகங்கள் அரசுடமை ஆக்கப்பட்டு, சில கப்பல் தளங்களுக்கு அவருடைய பெயரை சூட்டினார்.அதேபோல், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வ உ சி அவர்களுக்கு மிக அருமையான சிலை பார்ப்பதற்கு கம்பீரமாக உறுவாக்கப்பட்டது. 40 லட்ச ரூபாய் மதிப்பில் அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.2021 அறிவிக்கப்பட்ட அந்த சிலை, 2023ல் திறக்கப்பட்டது.செக்கிழுத்த செம்மல் என, வ உ சியை நாம் அழைக்கிறோம், அந்த சிலைக்கு தான் இன்று மரியாதை செலுத்தினோம்.
நாளைய தினம் நகராட்சி அமைச்சர் நேரு அவர்கள் வர உள்ளார்கள். பல புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார்கள், நடந்து முடிந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்கள்.மருதமலை கோவிலுக்கு செல்லக் கூடியவர்களுக்கு போதிய வசதிகள் போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ளது. கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகிறார்கள். கூட்ட நெரிசல், வாகன நெரிசல் இருக்கிறது, எனவே அதற்காக பல திட்டங்களை வகுத்து அந்த துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து, எட்டு ஏக்கர் நிலம் பார்த்து வாகனம் நிறுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலே நடந்து செல்பவர்கள் சுலபமாக செல்வதற்கு கடைகளை பக்கத்திலே மாற்றுவது உள்ளிட்ட பல திட்டங்கள் செய்ய உள்ளோம்.
பாதை வசதி சிறப்பாக அமைய, அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்துள்ளார். மலை பாதையை புதுப்பித்து போடுவதற்காக நடவடிக்கை பணிகள் செய்யப்பட்டுள்ளது.கோவை மாநகருக்குள் போக்குவரத்து நெருக்கடியை போக்க புறவழிச்சாலை துவக்கி வைத்துள்ளார்கள். அதன் பணிகள் நடைபெற்று வருகின்றது.
சிறுகுறு தொழிற்சாலைகள் மின் கட்டணம் பாதிப்புக்காக ஏழாம் தேதி கவனயீர்ப்பு உண்ணாவிரதம் பற்றிய கேள்விக்கு,
சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். டாஸ்மாக் கடையை பொருத்தவரை நிறைய சீர்திருத்தங்கள் சிக்கல்களை தீர்ப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், தவறாக மக்களிடையே கொண்டு போய் கருத்துக்களை செலுத்துகிறார்கள் என்றார்.
உதயநிதி 10 கோடி ரூபாய் பற்றிய கேள்விக்கு, அது எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் மக்கள் பிரச்சனை பார்க்க முடியாது. ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு என்பதை பொதுமக்கள் சாதாரண பொதுமக்கள் புரிந்து இருக்கிறார்கள் இப்படிப்பட்ட அறிவிப்பு செய்யலாமா மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
முதல்வர் 24 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் வருகிறார். கட்சி நிகழ்ச்சிக்காக வருகிறார். எட்டு மாவட்டங்களின. பாகமுகவர் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கு அடுத்தார் போல், கோவை மாவட்டத்தில் ஆய்வுக்காக நேரம் ஒதுக்க உள்ளார். அந்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.குடிநீரைப் பொறுத்தவரை பல்வேறு சிக்கல்கள் உள்ளது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும். என்றார்.
இந்த நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், இளைஞரணி அமைப்பாளர் தனபால், டவுன் அனந்த் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.